Published : 26 Jun 2015 08:33 AM
Last Updated : 26 Jun 2015 08:33 AM

இட்டார்சி தீ விபத்து எதிரொலி - 3 நாட்களில் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் இட்டார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, மேலும் 9 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்தியப் பிரதேச மாநிலம் இட்டார்சி ரயில் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படுகின்றன. தெற்கு ரயில்வேயும் பல விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது. இந்நிலையில், மேலும் 9 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இன்று ரத்தாகும் ரயில்கள்

சென்னை சென்ட்ரல் - டெல்லி நிஜாமுதீன் துரந்தோ வாரம் இருமுறை விரைவு ரயில் (12269), டெல்லி - சென்னை சென்ட்ரல் ஜி.டி விரைவு ரயில் (12616), டெல்லி நிஜாமுதீன் - திருவனந்தபுரம் சுவர்ண ஜெயந்தி வாரந்திர விரைவு ரயில் (12644), டேராடூன் மதுரை வாரம் இருமுறை விரைவு ரயில் (12688) ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாளை ரத்து

டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் வாரம் இருமுறை விரைவு ரயில் (12642), ஜம்மு தாவி - சென்னை சென்ட்ரல் அந்த மான் வாரம் 3 முறை விரைவு ரயில் (16032) ஆகியவை நாளை (27-ம் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாளை மறுநாள்..

பாட்னா - சென்னை சென்ட்ரல் பெங்களூரு சங்கமித்ரா விரைவு ரயில் (12296), கயா சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் (12389), புதுடெல்லி - சென்னை எழும்பூர் புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் (22404) ஆகியவை நாளை மறுநாள் (28-ம் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x