Published : 09 Jun 2015 08:49 AM
Last Updated : 09 Jun 2015 08:49 AM
‘தேர்தல் களத்தில் வெற்றி மட்டுமே இலக்கு அல்ல’ என்று ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந் திரன் கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். ஆனால் அவரை எதிர்த்து போட்டி யிட வேண்டிய திமுக, காங்கிரஸ், பாமக போன்ற பிரதான கட்சிகள் ஒதுங்கிவிட்டன. தேமுதிக, பாஜக போன்ற கட்சிகளும்கூட இந்த தேர்தலில் போட்டியிடும் என்பதற் கான எவ்வித அறிகுறியும் காணப் படவில்லை.
இந்த சூழலில் அதிமுகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் போட்டியிடுகின்றன. இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள் ளார். தேர்தல் பிரச்சாரத்துக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ‘தி இந்து’ நாளிதழுக்காக சி.மகேந்திரன் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:
மற்ற கட்சிகள் எல்லாம் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில் கம்யூ னிஸ்ட் கட்சி மட்டும் அதிமுகவை எதிர்த்து போட்டியிடுவது ஏன்?
தேர்தல் என்பது ஒரு ஜனநாயக நிகழ்வு. “ஒரு கட்சியின் கொள்கைகள் பற்றி மக்கள் மத்தி யில் விவாதிக்க தேர்தல் களம் மிகச் சிறந்த மேடை. அந்த மேடை எப்போதெல்லாம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அதை கம்யூ னிஸ்டுகள் சரியாகப் பயன்படுத் திக்கொள்ள வேண்டும்” என்று எங்கள் மூத்த தலைவர் ஜீவா அடிக்கடி கூறுவார். அந்த வகை யில்தான் இந்தத் தேர்தலில் நாங் கள் பங்கேற்றிருக்கிறோம்.
அதிமுகவை எதிர்த்து உங்களால் வெற்றி பெற முடியுமா?
தேர்தல் போட்டியில் பிரதான இலக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் வெற்றி மட்டுமே தேர் தலில் இலக்கு அல்ல. வெற்றிகள், தோல்விகள் இவை எல்லாவற் றையும் கடந்து நாம் நம்பி ஏற் றுக்கொண்ட மக்களுக்கான கொள் கைகள் என்பதே மிக முக்கியம். தேர்தலும், வாக்குகளும் கடைச் சரக்காக மாற்றப்பட்டிருக்கும் இன் றைய சூழலில் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் பற்றி மக்களு டன் விவாதிக்க எங்களுக்கு கிடைத் துள்ள இந்த வாய்ப்பு என்பது மிகப் பெரிய வெற்றியாகும்.
உங்கள் தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கும்?
இன்றைய மத்திய, மாநில அரசு களின் கொள்கைகளால் மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்படுகின் றன. பன்னாட்டு பெரும் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களின் நலன் களுக்கே முக்கியத்துவம் தரப்படு கின்றன. சாதாரண ஏழை மக்கள் இனி வாழவே முடியாது என்ற நிலையை நோக்கி இந்த நாடு சென்று கொண்டிருக்கிறது. நடுத் தர மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம்.
ஆனால் சாதாரண மக்களின் பிரச்சினைகளை யெல்லாம் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள், பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி இந்த நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஒரு மாயைத் தோற்றத்தை உருவாக்கு கிறார்கள்.
இந்த மாயையை உடைத்து, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகை யில் எங்கள் பிரச்சாரம் அமையும்.
இந்த தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்று எல்லோரும் சொல்கிறார்களே..?
போரின் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு அந்நிய தேசத் தைப் போல தற்போது ஆர்.கே. நகர் தொகுதி ஆளும் கட்சியினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கான அடிப்படைத் தேவை கள், அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி ஆளும் கட்சி தரப்பில் எதுவும் பேசப்படவில்லை.
இந்த சூழலில் மக்களின் பல் வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும், மக்களின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தும் பல கொள் கைகள், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளி டம் மட்டுமே உள்ளன. பண பலம், படை பலம், அதிகார பலம் என எல்லாவற்றையும் மிஞ்சியது மக் கள் சக்திதான். மக்கள் எங்களை அங்கீகரிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
தற்போதைய ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் முக்கியத்துவம் பற்றி உங்கள் கருத்து என்ன?
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, உயர் நீதி மன்ற மேல்முறையீட்டு வழக்கில் விடுதலையான நிலையில் இப் போது தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கிறார். இது மிகவும் முக்கியமானது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்திருப்பது இன் னொரு முக்கியத்துவம்.
இந்த தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்னதான் பலன் கிடைத்துவிடப் போகிறது?
ஆளும் கட்சி என்ற அதிகார பலத்தோடும், நிர்வாக பலத்தோடும் அதிமுக தேர்தலை சந்திக்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் ஒதுங்கிவிட்ட சூழலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் போட்டியிடுகின்றன. இதனால் மக்கள் மத்தியில் எங்கள் செல் வாக்கு அதிகமாகும் என்பது நிச்சயம். மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள், திட்டங்கள் பற்றி மக்களிடம் மிக அருகில் சென்று விவாதிக்க ஒரு நல்ல களம் கிடைத்துள்ளது. இதை மிகச் சிறந்த வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல் பாடுகள் யாவும் கட்சிக் குழுக்கள் கூடி விவாதித்து, தீர்மானத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படு கின்றன. உலகமய, தாராளமய கொள்கைகளுக்கு மாற்றாக, இடதுசாரிகள் முன்னிறுத்தும் மக்களுக்கான கொள்கைகளை முன்வைத்து ஒரு தேர்தல் அணி உருவாக வேண்டும் என்பது எங்கள் திட்டம்.
எங்களது அந்த தொலைநோக்கு இலக்கை அடைய இந்த இடைத் தேர்தல் நல்ல தொரு பாதையை எங்களுக்கு அமைத்து தந்துள்ளது என்பது உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT