Published : 30 Jun 2015 08:03 AM
Last Updated : 30 Jun 2015 08:03 AM

சிறப்பாக சேவையாற்றியதற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு மத்திய அரசின் சிறப்பு விருது

பாஸ்போர்ட் கோரி விண்ணப் பிக்கும் விண்ணப்பதாரர் களுக்கு சிறப்பான சேவையை அளித்ததற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவல கத்துக்கு மத்திய அரசு விருது கிடைத்து உள்ளது.

இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் நேற்று கூறிய தாவது:

சென்னை மண்டல பாஸ் போர்ட் அலுவலகம் மூலம் கடந்த 2014-15-ம் ஆண்டில் 4.14 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப் பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 25 ஆயிரம் கூடுதல் ஆகும். பாஸ்போர்ட் கோரி விண்ணப் பிக்கும் விண்ணப்பதாரர் களுக்கு சிறப்பான சேவை அளித்ததற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவல கத்துக்கு சிறந்த சேவைக்கான விருதை மத்திய அரசு வழங்கி யுள்ளது. கடந்த வாரம் டெல்லி யில் நடைபெற்ற அகில இந்திய பாஸ்போர்ட் அதிகாரிகள் மாநாட்டில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இவ்விருதை வழங்கி னார்.

இந்திய அளவில் அதி களவு பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரம், கேரளத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. பொய்யான சான்றிதழை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றதற்காக 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014-15-ம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற் கொள்ள பாஸ்போர்ட் கோரி 781 விண்ணப்பங்கள் பெறப் பட்டன. இதில், 600 பேருக்கு பாஸ்போர்ட்கள் வழங்கப் பட்டன.

புதுச்சேரியில் பாஸ்போர்ட் மையம் திறப்பதற்கான பணி கள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் மாத இறுதி யில் இம்மையம் செயல்படத் தொடங்கும். இதன் மூலம், புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறலாம்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப் பிப்பவர்கள் தரும் விவரங்களை காவல்துறையினர் மூலம் சரி பார்ப்பதற்கு தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க அவர்களுக்கு பயிற்சி அளிக் கும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட் குறித்த தகவல் களை சேகரிப்பதற்காக ஒருங் கிணைந்த தகவல் சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 90 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ஒரு கோடி பாஸ்போர்ட்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

இச்சந்திப்பின்போது உதவி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலசுப்பிரமணியன், மத்திய தகவல் துறை கூடுதல் இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x