Published : 25 Mar 2014 10:55 AM
Last Updated : 25 Mar 2014 10:55 AM

வேட்பாளரை மாற்றக் கோரி தேமுதிகவினர் போராட்டம்: கடலூர் தொகுதியில் பரபரப்பு

கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளரை மாற்றக் கோரி அக்கட்சியினரே போராட்டத்தில் குதித்தனர். இதனால் கடலூர், வடலூரில் பரபரப்பு நிலவியது.

பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறது. இதன் வேட் பாளராக திட்டக்குடி வட்டம் முருகன் குடியைச் சேர்ந்த ராமனுஜம் அறிவிக் கப்பட்டிருக்கிறார். அவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், தற்போது சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தொகுதிக்குள் இருப்பவர்களை வேட்பாளராக அறிவிக்காததற்கு தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

இந்நிலையில் வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி மாவட்ட தேமுதிக இளைஞரணி துணைச் செயலர் தவபாலன் தலைமையில் வடலூர் பஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையறிந்த நகர செயலர் ஆனந்தன், சம்பவ இடத்துக்கு வந்து தவபாலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வடலூர் போலீஸார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று கடலூர் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் திரண்ட தேமுதிகவினர் மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, நெல்லக்குப்பம் வி.சி.சண்முகம் ஆகியோரில் ஒருவருக்கு சீட் வழங்க வேண்டும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை மாற்றாவிட்டால்,தேர்தல் வேலை கள் செய்யப்போவதில்லை எனவும் விஜயகாந்த் பொதுக்கூட்டங் களையும் புறக்கணிக்கப் போவதாக வும் கூறினர்.

இது தொடர்பாக பண்ருட்டி எம்எல்ஏ சிவக்கொழுந்துவிடம் கேட்ட போது, “வேட்பாளரை மாற்ற வேண் டும் என்று கூறுபவர்கள் கட்சிக்கு உபயோகமற்றவர்கள் கிளப்பும் வதந்தி. வேட்பாளர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x