Published : 27 Jun 2015 11:34 AM
Last Updated : 27 Jun 2015 11:34 AM

சென்னையில் தங்கம் விலை சற்றே அதிகரித்தது

சென்னையில் தங்கம் விலை இன்று சற்றே அதிகரித்தது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2501-க்கு விற்கப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்தது. நேற்று மாலை நிலவரப்படி, பவுனுக்கு ரூ.8 குறைந்து ரூ.19,992-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் விலை ரூ.2,499 என்ற அளவில் இருந்தது. கடந்த 4 மாதங்களில் ஒரு பவுன் (22 கேரட்) விலை ரூ.20,000-க்கு கீழே இறங்கியது இதுவே முதல் முறை.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.20,008-ஆக உள்ளது. 24 கேரட் சுத்த தங்கம் 10 கிராம் ரூ.26750-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.38.70-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36190-க்கும் விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x