Published : 06 Jun 2015 07:52 AM
Last Updated : 06 Jun 2015 07:52 AM

மயிலாப்பூரில் இலவச வாகன சேவை

மயிலாப்பூரில் இருந்து மிடியூசிக் அகாடமி வரை செல்லும் ஏசி வசதியுடன் கூடிய இலவச வாகனம் (ஷேர் ஆட்டோ போல்) அப்பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

‘பாலம் சில்க்ஸாரி’யின் பாலம் என்ற அமைப்பு சார்பில் மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் இருந்து மியூசிக் அகாடமி வரை ‘டாடா ஏசி கேப்’ என்ற வாகன சேவை கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வாகனத்துக்கு மயிலாப் பூர் ப்ரீ எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.இலவச குளு, குளு பயணத்துக்கு மக்கள் சில இடங்களில் காத்திருக் கிறார்கள். இந்த வாகனத்தில் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஆர்.சரவணன்(40) என்ப வர் ஓட்டுநராக பணியாற்றி வரு கிறார்.

காலை 10 மணிக்கு மயிலாப்பூர் சர்ச் சாலையில் புறப்படும் இந்த இலவச வாகனம், ஆஞ்சநேயர் கோயில் (ஆழ்வார்பேட்டை), நாரதகானா சபா வழியாக மியூசிக் அகாடமியை சென்றடைகிறது. இதேபோல், மறுவழியாக மியூசிக் அகாடமியில் புறப்பட்டு, சிஐடி காலனி, இசபெல்லா மருத்துவமனை, விவேகானந்தா கல்லூரி, வள்ளுவர் சிலை வழியாக மயிலாப்பூர் லஸ் சந்திப்பை வந்தடைகிறது. ஆரம்பத்தில் இந்த வாகனத்தை பார்த்து இலவச பயணத்துக்கு தயங்கிய மக்கள், தற்போது இந்த இலவச வாகனத்துக்காக காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

இது தொடர்பாக ஓட்டுநர் ஆர்.சரவணன் கூறியதாவது:

கோடை வெயிலில் பேருந்துக் காக பேருந்து நிறுத்தங்களில் வயதானவர்கள், குழந்தைகள் காத்திருக்கின்றனர்.

இந்த வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது மயிலாப்பூர் ப்ரீ எக்ஸ்பிரஸ் என பெயரை பார்ப்பவர்கள் கூட, இதில் ஏறி பயணம் செய்ய தயங்கினார்கள். பின்னர், இலவச வாகனம்தான் என மக்களிடம் தெரிவித்த பிறகுதான், இதில் ஏறி பயணம் செய்ய தொடங்கினர்.

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையில் மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் இருந்து மியூசிக் அகாடமி வரையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 15 முறையாவது சுற்றி, சுற்றி இந்த வாகனம் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒருமுறை பயணம் செய்தவர்கள், இந்த வாகனத்துக்காக காத்திருந்து பயணம் செய்கின்றனர். புதியதாக பயணம் செய்வோர் தயக்கத்துடன்தான் பயணம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 35 பேர் முதல் 40 பேர் வரை பயணம் செய்கிறார்கள். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும், அதிகரிக்கும் என நம்புகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x