Published : 14 Jun 2015 11:10 AM
Last Updated : 14 Jun 2015 11:10 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை: நாளை மாலை நல்ல நேரத்தில் தரவரிசை பட்டியல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. காலையில் நல்ல நேரம் இல்லை என்பதால் வழக்கத்துக்கு மாறாக மாலை 4.30 மணிக்கு பட்டியல் வெளியாகிறது.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,655 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 398 இடங்கள் (15%) போக, மீதமுள்ள 2,257 இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படுகின்றன.

இவை தவிர 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரி களில் இருந்து 780 எம்பிபிஎஸ் இடங்களும் 23 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 1,432 பிடிஎஸ் இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்நிலையில், 2015 - 16 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு மொத்தம் 32,184 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 11-ம் தேதி மாணவ, மாணவிகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்தில் நாளை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வழக்கமாக காலை அல்லது நண்பகலில்தான் தரவரிசைப் பட்டி யல் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு மாலையில் பட்டி யலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அதிகாரி விளக்கம்

மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான தரவரிசைப் பட்டியலை 15-ம் தேதி வெளியிடுகிறோம். காலையில் நல்ல நேரம் இல்லாத தால், மாலை யில் வெளியிட முடிவு செய்துள்ளோம். மாலை 4.30 மணிக்கு நல்ல நேரம் என்பதால், அந்த நேரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x