Published : 05 Jun 2015 07:52 AM
Last Updated : 05 Jun 2015 07:52 AM
மெரினாவில் உள்ள கடை களை முறைப்படுத்த கடந்த ஒரு வாரமாகவே மாநகராட்சி அதிகாரி கள் முயன்று வருகின்றனர். ஆனால் அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் பின் நேற்று ஒரு சில கடைகள் மட்டும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரையில் உட்புறச் சாலையை ஒட்டியவாறே கிழக்கு-மேற்கு திசையில் பல கடைகள் உள்ளன. ஆனால், அந்த கடைகளை அங்கிருந்து அகற்றி, அவை வடக்கு -தெற்கு திசையில்- அதாவது மணற்பரப்பில் கடலை நோக்கிய வரிசையில் முறைப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி கூறி வருகிறது.
சாலையோரமாக இருந்தால் தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்றும், மணற் பரப்பில் கடைகள் போட்டால், முதல் கடைக்கு மட்டும் வாடிக்கை யாளர்கள் வருவார்கள், அதுவும் குறைவான எண்ணிக்கையில்தான் வருவார்கள் என்றும் வியாபாரிகள் கூறி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன், கடைகளை முறைப்படுத்த வந்த மாநகராட்சி அதிகாரிகளை மெரினா வியா பாரிகள் அனுமதிக்கவில்லை.
பிறகு, நேற்று மாநகராட்சியின் கறாரான நடவடிக்கையால், கடைகள் முறைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. பளு தூக்கும் இயந்திரங்கள் (கிரேன்) கொண்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் பிறகு, அவை சீராக ஒரே வரிசையில் வடக்கு -தெற்கு திசையில் அமைக்கப்பட்டன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “மெரினா வில் சுமார் 500 கடைகள் உள்ளன. கடந்த காலங்களிலேயே இந்த கடைகளை முறைப்படுத்த மாந கராட்சி முயன்றுள்ளது. ஆனால், முடியவில்லை. தற்போது அந்த கடைகளை முறைப் படுத்தியுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT