Last Updated : 11 Jun, 2015 08:37 AM

 

Published : 11 Jun 2015 08:37 AM
Last Updated : 11 Jun 2015 08:37 AM

சீஸன் அறிகுறியே இல்லை: பருவமழை தாமதத்தால் தண்ணீரின்றி வறண்டது குற்றாலம் - வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

குற்றாலத்தில் தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்குள்ள பேரருவி, தேனருவி, செண்பகா தேவி அருவி, புலி அருவி, ஐந்த ருவி, பழத்தோட்ட அருவி ஆகிய வற்றில் ஆனந்தமாக கூட்டம் குவியும்.

குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் சாரல் மழை பெய்யத் தொடங்கும். அருவிகளில் பொங்கிப் பாயும் வெள்ளமும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டமுமாக சீஸன் களைகட்டும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சீஸன் பிரமாதமாக தொடங்கி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை தாமதத்தால் குற்றாலத்தில் சீஸனுக்குரிய அறிகுறியே தெரிய வில்லை. தென்மேற்குப் பருவ மழை மேலும் தாமதமானால் குற் றால சீசன் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிவிடும் என்றே தெரிகிறது.

கோடையை மிஞ்சிய வெயில்

மே மாதம் அக்னி நட்சத்திர வேளையில் மாவட்டத்தில் வெப்பச் சலனத்தால் மழை பெய்த போது குற்றால அருவிகளிலும் தண்ணீர் விழுந்தது. ஆனால், தற் போது அக்னி நட்சத்திர வெயிலை காட்டிலும் அதிக வெப்பம் குற்றாலத்தை சுட்டெரிக்கிறது.

இங்குள்ள பிரதான அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் பாறையை ஒட்டினாற்போல் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. மற்ற அருவிகளில் பாறைகள் வறண்டிருக்கின்றன. இதனால் இங்குவரும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீரில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிடுகிறது.

முன்னேற்பாடுகள் தீவிரம்

இந்த ஆண்டுக்கான சீஸனுக் காக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகிய அரசுத் துறைகள் இணைந்து பல்வேறு முன்னேற்பாடு பணி களை செய்திருக்கின்றன. குற்றச் செயல்களைத் தடுக்கும் வகை யில் குற்றாலத்தில் அருவிப் பகுதிகள், சுற்றுலாப் பயணி கள் கூடும் இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டிருக்கின்றன. கட்டண கழிப்பிடங்கள் சீரமைக்கப்பட்டிருக் கின்றன.

வியாபாரிகள் ஏமாற்றம்

சீஸனுக்காக தற்காலிகமாக 156 கடைகளை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விட்டிருக்கிறது. அவற்றில் 100 கடைகள் வரையில் தலா ரூ.1.5 லட்சத்துக்கு வியாபாரிகள் ஏலம் எடுத்திருக்கிறார்கள். மற்ற கடைகள் ரூ.1 லட்சம் வரையில் ஏலம் எடுக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 10 நாட்களாக சீஸன் தொடங்கவில்லை என்பதால், கடைகளை ஏலம் எடுத்தவர் கள் வருண பகவானை வேண்டு கிறார்கள். இதுபோல் இங்குள்ள 350-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளை நடத்துவோரும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார் கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x