Published : 13 Jun 2015 10:23 AM
Last Updated : 13 Jun 2015 10:23 AM

பாரா மோட்டார் கருவி மூலம் கோடியக்கரை வனப் பகுதியில் விமானத்தை தேடும் பணி

காணாமல்போன விமானத்தை தேடும்பணி நேற்று நாகை மாவட் டம், கோடியக்கரை வனப் பகுதி யில் தீவிரமாக நடைபெற்றது.

கடலோரப் பாதுகாப்புக் குழும துணைத் தலைவர் சைலேந்திரபாபு தலைமையிலான வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கோடியக்கரை வனப் பகுதி மற்றும் கடல் பகுதிகளில் ‘பாரா மோட்டார்’ என்ற கருவியை வானில் பறக்கவிட்டு, தடயங்கள் எதுவும் கிடைக்கிறதா என்று தேடினர்.

மேலும், கோவையிலிருந்து வந்த தொழில்நுட்பக் குழுவின ரும், டிஎஸ்பி என்ற கருவி மூலம் கடல் பகுதியிலிருந்து விமானத்தின் சிக்னல்கள் எதுவும் கிடைக்கிறதா என்ப தைக் கண்காணித்தனர். 40 மீட்டர் ஆழத்தில் விமானம் இருந்தா லும், அதிலிருந்து சிக்னலைப் பெற்றுவிடும் திறன் வாய்ந்தது இந்தக் கருவி.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும துணைத் தலைவர் சைலேந்திரபாபு செய்தி யாளர்களிடம் கூறும்போது, “10 அதிநவீன ரோந்துப் படகுகள் மூலம் தேடுதல் பணி நடக்கிறது. காணாமல்போன விமானம் கடலில் விழுந்திருந்தால், அதிலிருந் தவர்கள் நீந்திக் கரையோரம் வந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, கரையோரப் பகுதி களில் தீவிர தேடுதல் பணி நடைபெறு கிறது. ஏதாவது தடயம் கிடைத் தால் தகவல் தெரிவிக்குமாறு மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட் டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x