Published : 25 Jun 2015 09:46 AM
Last Updated : 25 Jun 2015 09:46 AM

அரசுப் பண்ணையின் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணியை தடுத்த கிராம மக்கள்: ஊராட்சித் தலைவரின் கணவர் மீது அதிகாரி குற்றச்சாட்டு

காஞ்சிபுரத்தை அடுத்த களக் காட்டூர் பகுதியில் தோட்டக்கலைத் துறை பண்ணை நிலத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக ளால், தாங்கள் பாதிக்கப்படு வதாகக் கூறி கிராம மக்கள் நேற்று கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

பொதுமக்களின் இந்த நடவடிக் கைக்கு களக்காட்டூர் ஊராட்சித் தலைவரின் கணவர் கிராம மக்களை தூண்டிவிடுவதே காரணம் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரி குற்றஞ்சாட்டினார்.

களக்காட்டூர் கிராமப் பகுதியில் அரசு தோட்டக்கலைத் துறை பண்ணை உள்ளது. இங்குள்ள பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணையை தனிப் பிரிவாக ஏற்படுத்துவதற்கு வசதியாக, களக்காட்டூர் ஊராட் சிக்குச் சொந்தமான 70 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம், ஊராட்சி நிர்வாகம் சார்பில் 1982-ல் தீர்மானம் நிறைவேற்றி தோட்டக்கலைத் துறைக்கு வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் சிறிய அளவில் பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணை அமைக்கப் பட்டதால், நிலத்தில் பெரும்பகுதி காலியாக உள்ளது.

அந்த காலி நிலத்தை ஆக்கி ரமிக்க சிலர் முயன்றதையடுத்து, தோட்டக்கலைத் துறை இயக்க கத்தின் உத்தரவின்பேரில், நிலத்தைச் சுற்றி ரூ. 1 கோடி செல வில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், சுற்றுச்சுவர் கட்டப் படுவதால் தாங்கள் பாதிக்கப் படுவதாகக் கூறி களக்காட்டூர் கிராம மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், நேற்று சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி களை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:

இந்த நிலத்தில் சுமார் 40 ஆண்டுகளாக கால்நடைகளை மேய்த்து வருகிறோம். தற்போது சுற்றுச்சுவர் கட்டப்பட்டால் கால் நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படும். தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான நிலத்துக்கும், களக் காட்டூரில் இருந்து வாலாஜாபாத் செல்வதற்காக அமைந்துள்ள நெடுஞ்சாலைக்கும் நடுவில் எங்கள் குடியிருப்புகள் அமைந் துள்ளன. இந்த நிலையில், புறவழிச் சாலை அமைப்பதற்காக சாலையோரம் உள்ள எங்களது நிலங்களை அளவீடு செய்து வருகின்றனர். இதனால், எங்களது குடியிருப்புகள் அமைந்துள்ள நிலத்தில் 10 அடி முதல் 15 அடி வரை அரசு கையகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே, அதனால் எங்களுக்கு ஏற்படும் இழப்பை, தோட்டக்கலைத் துறை யின் நிலத்தில் ஒதுக்கி ஈடுசெய்யும் வகையில், குடியிருப்புகளுக்குப் பின்னால் சுமார் 15 அடிக்கு அப்பால் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

மேலும், இந்தச் சுற்றுச்சுவரால் அருகில் சுமார் 250 ஏக்கரில் உள்ள விளை நிலங்களுக்குச் சென்று வர நாங்கள் பயன்படுத்தி வந்த பாதை அடைபட்டு, வயல்களுக்கு எளிதில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருப்பதால்தான், சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி களைத் தடுத்து நிறுத்தினோம் என்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி கூறியதாவது:

தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கி ரமிக்க முயற்சிகள் நடைபெற்றதாலேயே சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளால் களக்காட்டூர் ஊராட்சித் தலைவரின் கணவர் உலகநாதனின் ஆதரவாளர்கள் சிலர் அந்தப் பகுதியில் ஆக்கிர மித்துள்ள 7 ஏக்கர் நிலம் பறி போகும் என்ற நிலை உள்ளது. எனவே, அவரது தூண்டு தலின்பேரில்தான் கிராம மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடு பட்டு வருகின்றனர். எனினும், தோட்டக்கலைத் துறையின் நிலங்களை பாதுகாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x