Published : 03 Jun 2015 06:52 PM
Last Updated : 03 Jun 2015 06:52 PM

ஆர்கே நகர் இடைத்தேர்தல்: செலவின பார்வையாளர் மாற்றம் - தேர்தல் விதி மீறல் தொடர்பாக 29 வழக்குகள் பதிவு

ஆர்கே நகர் இடைத்தேர்தல் செல வின பார்வையாளர் மாற்றப்பட்டுள் ளார். தேர்தல் விதிமீறல் தொடர் பாக இதுவரை 29 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.

சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்நிலையில் தேர்தல் செல வின பார்வையாளராக நியமிக்கப் பட்டிருந்த ராகுல் ரமன் மாற்றப்பட்டு மன்ஜித்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தல் செலவின பார்வை யாளராக நியமிக்கப்பட்டிருந்த ராகுல் ரமனின் தாயாரின் மறைவு காரணமாக அவர் கேட்டுக் கொண்ட படி இப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் மன்ஜித்சிங் நியமிக்கப்பட் டுள்ளார். அவர் இன்று (நேற்று) மாலை பதவியேற்கிறார்.

தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில் விதிகளை மீறி போஸ்டர், பேனர் வைத்த வகையில் 759 இனங்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் இவற்றின் மீது வழக்கு பதியப்படும். நட்சத்திர பேச்சாளர் தொடர்பாக ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் வந்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தமிழக போலீஸ் டிஜிபி, கூடுதல் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு), சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உட்பட கடைநிலை காவலர் வரை தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றுவர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்துவதற்கு தேவையான மின் னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான புகார்களை ‘1950’ எனும் தொலைபேசி எண் ணில் தெரிவிக்கலாம். இதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட் டுள்ளது. தேவை கருதி வசதிகள் அதிகரிக்கப்படும்.

29 வழக்குகள்

தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 29 வழக்குகள் பதியப்பட் டுள்ளன. உரிமம் பெற்ற 31 துப் பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 36 பிடிவாரன்ட்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. 6 இடங்களில் சோத னைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சாவடியிலும் வட்டாட்சியர் தலைமையில் ஒரு குழு கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபடுகிறது. இது வரை பணம் மற்றும் பொருட்கள் பிடிபடவில்லை என்றார்.

இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் ரத்து!

ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறி விக்கப்பட்ட நிலையில் சென்னை நகரில் போலீஸ் உள்ளிட்ட எந்த அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டாலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். ஆனால், ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், 27-ம் தேதி ஆர்கே நகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 6 இன்ஸ் பெக்டர்கள் இடமாற்றம் செய்யப் பட்டனர். இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரிக்கு டிராஃபிக் ராமசாமி மனு அளித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின் நடந்துள்ள இன்ஸ்பெக்டர்கள் மாற்றத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x