Published : 06 Jun 2015 08:44 AM
Last Updated : 06 Jun 2015 08:44 AM

காயிதே மில்லத் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

காயிதே மில்லத்தின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வ நாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப் பாடி பழனிச்சாமி, பி.பழனியப்பன் உள்ளிட்டோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் அக்கட்சி யின் பொருளாளர் மு.க.ஸ்டா லின், மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘காயிதே மில்லத்தின் 120-வது பிறந்த நாளில் அவரது குறிக்கோள்களையும், அவர் விட்டுச் சென்ற கொள்கை களையும் பாதுகாக்க உறுதியேற் போம். அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப் பினர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. திமுக மீது அதிக பாசம் காட்டி யவர். முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் என முஸ்லிம்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை இந்த நேரத்தில் நினைவுகூரவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்திருமாவளவன் உள்ளிட்டோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x