Published : 29 Jun 2015 07:46 AM
Last Updated : 29 Jun 2015 07:46 AM

திமுக கப்பலில் ஏற யாரும் தயாராக இல்லை: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

திண்டிவனத்தில் நேற்று முன் தினம் இரவு பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும்போது:

கடந்த 50 ஆண்டு கால திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் இருண்ட மாநிலமாக மாறிவிட்டது. பெரியார் சுயமரியாதை மற்றும் தன்மானத்தை வலியுறுத்தினார். அவருக்கு பின் வந்த அண்ணா கண்ணியத்தையும் சேர்த்து வலியுறுத்தினார். இன்றைய அரசியலில் அவை காணாமல் போய்விட்டன.

2006-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய லலிதா காரில் சென்று பிரச் சாரம் செய்யவில்லை. எங்கும் ஹெலிகாப்டரில்தான் செல்கிறார். இவர்தான், தன்னை ஏழைப்பங் காளி என்று சொல்கிறார். சட்டப் பேரவையில் எப்போதாவதுதான் 110 விதியை பயன்படுத்துவார்கள். ஏனெனில் 110 விதியின் கீழ் வாசிக் கப்படும் அறிக்கையை விவாதிக்க முடியாது.

இந்த 4 ஆண்டுகளில் 150 முறை 110 விதியின் கீழ் அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது. இப்படி கொண்டுவரப்பட்ட திட் டங்களில் 5 சதவீதம்கூட நிறை வேற்றப்படவில்லை. தொண்டர் களை அடிமையாக நடத்தும் கட்சி அதிமுக தான். முன்னாள் முதல்வர்கூட ஜெயலிதாவை உடனே சந்திக்க முடியவில்லை.

அன்று முதல் இன்று வரை இடைத்தேர்தலை புறக்கணித்து வருகிறோம். தமிழகத்தில் தற்போது கண்ணியமான அரசியல் இல்லை.

திமுக என்ற கப்பலில் ஏறுவ தற்கு யாரும் தயாராக இல்லை. பாஜக தற்போதுதான் உறுப்பினர் களை சேர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் 50 சதவீத மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மக்கள் விரும்பும் மாற்றத்தை பாமக-வால் தான் தர முடியும். பாமக சார்பில் முதல்வர் வேட் பாளராக அன்புமணி ராமதாசை அறிவித்து உள்ளோம். மக்கள் எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x