Published : 10 Jun 2015 07:50 AM
Last Updated : 10 Jun 2015 07:50 AM

மகளிர் குழு மூலம் சிமெண்ட் விற்பனை தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை நேற்று முதல் தொடங்கியது.

தமிழக அரசு தொடங்கியுள்ள அம்மா சிமெண்ட் விற்பனை, திரு வள்ளூர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஏற்கெனவே நடந்து வருகிறது. இந்நிலையில் முதன் முதலாக தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை நேற்று முதல் தொடங்கியது.

இதன் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பங்கேற்று விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

100 சதுர அடி வீடு கட்டுபவர் களுக்கு 50 மூட்டை சிமெண்ட் வழங் கப்படும். அதிகபட்சமாக 1500 சதுர அடி வீடு கட்டுபவர்களுக்கு 750 மூட்டை சிமெண்ட் படிப்படியாக உரிய ஆவணங்களின் அடிப்படை யில் வழங்கப்படும் என்றார்.

இந்த விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் குமார், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கக திட்ட இயக்குநர் வீரணன், டான்செம் துணை மேலாளர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x