Published : 15 Jun 2015 07:50 AM
Last Updated : 15 Jun 2015 07:50 AM

மாமல்லபுரத்தில் கைவினை பொருட்கள் விற்பனை கூடம் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மாமல்லபுரத்தில் பல்வேறு மாவட்டங்களின் கைவினை பொருட்கள் விற்பனை கூடம் திறக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மகளிர் வாழ் வாதாரத்தை உயர்த்தும் நோக் கில், மகளிர் சுய உதவிக் குழுக் களின் உற்பத்தியை அதிகரிக்க வும், உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத் திக் கொடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாவட்டங்களின் தனித்துவம் மிக்க கைவினை பொருட்களை விற்பனை செய்யும் கூடம் ஒன்று மாமல்லபுரத்தில் நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் சண்முகம் திறந்து வைத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைவினை பொருட்களை பார்வையிட்டார்.

இது தொடர்பாக மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கிருஷ்ணம் மாளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மகளிர் குழுக்கள் தயாரிக்கும் துணி வகைகள், பனை ஓலை தொப்பி, பெட்டி, மூலிகை பொருட் கள், நாகப்பட்டினத்தில் தயாரிக் கப்படும் தானிய உணவு வகை கள், தஞ்சாவூர் பொம்மை, திரு நெல்வேலி பத்தமடை பாய், விழுப் புரத்தில் தயாரிக்கப்படும் ஜன்னல் களுக்கான பாய்கள், வேலூர் மலை தேன் ஆகியவை பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றை ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும் விதமாக மாமல்லபுரத்தில் விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை கூடம் கடற்கரை கோயில் அருகில் உள்ளது.

இங்கு தற்போது ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற் பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் நீலகிரி தைலம் போன்ற பொருட்களையும் விற்க நடவடிக்கை எடுத்து வருகி றோம். இதே போன்ற விற் பனை கூடத்தை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் திறக்கவும் நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x