Published : 09 May 2014 11:16 AM
Last Updated : 09 May 2014 11:16 AM
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருப்பது ஏற்புடை யதல்ல என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
கொச்சியில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை சென்னை வந்த மத்திய அமைச்சர் நாரா யணசாமி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மிருகவதையைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல. மிருகவதை செய்யாதவாறு இந்த விளையாட்டில் விதிமுறைகளை கடுமையாக்கி அனுமதி வழங்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் போராட்டம் நடத்தப்படுவது கவலை அளிக்கிறது. விவசாயி களின் வாழ்வாதாரப் பிரச்சினை யான இதில் இரு மாநில அரசு களும் சுமூகமான நிலையை மேற் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. அதிகாரிகளின் குளறு படியால் இதில் பிரச்சினை எழுந் துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய பணம் நிச்சயம் கிடைக்கும்.
கூடங்குளம் அணுமின் நிலை யத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி கருத்துக் கூற முடியாது. இந்தியாவிலேயே கூடங்குளம் அணுமின் நிலையத் தில்தான் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது என்றார் நாராயணசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT