Published : 06 Jun 2015 08:00 AM
Last Updated : 06 Jun 2015 08:00 AM

உலகச் சுற்றுச்சூழல் தினம்: பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் - பசுமைத் தாயகம் பிரச்சாரம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் என்று துண்டு பிரசுரம் விநியோகித்து நேற்று பிரச்சாரம் செய்யப் பட்டது.

தி.நகர் பேருந்து நிலையம், தெற்கு உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட இடங்களில் இருந்த பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஆகியோரிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.மூர்த்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.

“பிளாஸ்டிக் பைகள் சராசரியாக 12 நிமிடங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், 1000 வருடங்களுக்கு அவை அழியாமல் சுற்றுச்சூழலை கெடுக்கும். பிளாஸ்டிக் சாலைகள் போடுவது, இந்த பிரச்னைக்கு தீர்வாகாது. கடைகளில் கொடுக்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து சட்டப்படி வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பொதுமக்கள் கடை களுக்கு செல்லும்போது துணிப்பைகள் கொண்டு செல்ல வேண்டும்” என்று விழிப்புணர்வு செய்தி அச்சிட்ட பிரசுரங்களை பசுமைத் தாயகத்தின் நிர் வாகிகள் தி.நகர் பகுதியில் விநியோகித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x