Published : 16 Jun 2015 09:31 AM
Last Updated : 16 Jun 2015 09:31 AM

மாற்றுப் பாதையில் செயல்படுத்தாமல் விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: செங்கல்பட்டில் 24-ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் காற்றாலை மின்சாரத்தை தென்சென்னை பகுதியின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. இதற்காக அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டியம்பாக்கம் துணை மின்நிலை யம் வரை டான் டிரான்ஸ்கோ நிறுவனம் மூலம் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

இதில், சிறுசேரியில் உள்ள சிப்காட் பகுதியின் மின்தேவைக் காக, கலிவந்தப்பட்டு மின்நிலையத் திலிருந்து காயார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் வழியாக 21 மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது.

இதில், திருப்போரூர் ஒன்றியத் துக்குட்பட்ட காயார் கிராம விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதைக் கண் டித்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றமும் பசுமை தீர்ப்பாய மும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டன.

இதை தொடர்ந்து, காயார் கிராமப் பகுதியில் மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகளை தனியார் நிறுவனத்தினர் தொடங்கினர். இதனிடையே கிராம மக்கள் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு உயர்நீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர், பத்திரிகை யாளர்களிடம் அவர் கூறியதாவது: விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் விசாயத்துக்கு ஏற்ற நிலம் இல்லை என மாவட்ட நிர்வாகம் தவறான அறிக்கையினை வழங்கியுள்ளது.

மேலும், செங்கல்பட்டு கோட் டாட்சியர் பன்னீர்செல்வம் தலை மையிலான வருவாய்த்துறையினர், போலீஸாரின் உதவியோடு விளை நிலங்களை சேதப்படுத்தியுள்ளனர். இப்பிரச்சினையில் மாநில அரசு உடனடியாக தலையிட்டு பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவா ரணம் வழங்க வேண்டும். விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று வழியில் இத்திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும், விளைநிலங்களை சேதப் படுத்திய கோட்டாட்சியர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி ஜேசிபி இயந்திரம் மூலம் விளைநிலங் களை சேதப்படுத்திய கோட்டாட் சியர் பன்னீர்செல்வம், அவருக்கு துணையாக செயல்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் நேற்று மனு அளித்தனர்.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் விவசாயி கள் சங்கம் அறிவித்துள்ளது.

இப்பிரச்சினை குறித்து, காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறும்போது, ‘நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தடை ஆணை பெற்றுள்ளதால் மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக நட வடிக்கை மேற்கொள்ள முடியாது. எனினும், மாற்றுப் பாதையில் மின்கோபுரங்களை அமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் மனு அளித்துள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட துறையிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x