Published : 01 Jun 2015 10:35 AM
Last Updated : 01 Jun 2015 10:35 AM

காஸ் நுகர்வோர் நேரடி மானிய திட்டத்தில் முன்பணம் வரவு வைப்பதில் மாற்றம்: சிலிண்டரின் சந்தை விலைக்கேற்ப வேறுபடும்

காஸ் நுகர்வோர் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்து முதல் சிலிண்டர் பதிவு செய்வோருக்கு, தற்போது மானியத் தொகை அளவிலேயே முன்பணம் வரவு வைக்கப்படுகிறது.

காஸ் நுகர்வோர்களுக்கு அரசு மானிய விலையில் சிலிண்டர் வழங்கி வந்தது. மானியத் தொகை உரியவர்களுக்கு முறையாக சென்று சேரும் வகையில், அதை நுகர்வோருக்கு நேரடியாக அளிக்க அரசு முடிவு செய்து எல்பிஜி மானிய பலன் நேரடி பரிமாற்ற திட்டத்தை (டிபிடீஎல்) 2013 அக்டோபர் 1-ம் தேதி நடை முறைக்கு கொண்டு வந்தது.

இத்திட்டத்தின்கீழ் நுகர்வோ ருக்கு சந்தை விலைக்கு சிலிண்டர் வழங்கப்பட்டு, மானியத் தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்காக நுகர் வோர் அவரது ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை காஸ் இணைப்பு பெற்றுள்ள ஏஜென்சிகளிடம் பதிவு செய்ய வேண்டும்.

இதன்படி விவரங்கள் அளித்த வர்களுக்கு இத்திட்டத்தின்கீழ் முதல் சிலிண்டர் பதிவு செய்யும் போது மட்டும் ரூ.435 முன்பண மாகவும், சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு அப்போதைய சிலிண்டர் விலையில் மானியத் தொகையும் கணக்கில் வரவு வைக் கப்பட்டு வந்தது.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற் பட்ட பிறகு, இத்திட்டம் பஹல் எனப் பெயர் மாற்றத்துடன் 2015 ஜனவரி 1-ல் நடைமுறைக்கு வந்தது.

ஆதார் எண் கட்டாயம் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, வங்கிக் கணக்கு எண் மட்டும் அளித் தால் போதும் என அறிவிக்கப் பட்டது. இத்திட்டத்தில் இணைந்த வர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை, முதல் சிலிண்டர் பதிவு செய்தபோது முன்பணமாக வங்கிக் கணக்கில் ரூ.568 வரவு வைக்கப்பட்டது. அதன்பிறகு சந்தையில் சிலிண்டரின் விலைக்கேற்ப மானியத் தொகை மட்டும் கணக்கில் வரவு வைக் கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் இத்திட்டத்தில் இணைந்து முதல் சிலிண்டர் பதிவு செய்தவர்களுக்கு, மானியத் தொகை அளவிலேயே முன்பண மும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

முதலில் முன்பணம் ரூ.435 என் றும், அதன்பின் ரூ. 568 எனவும் வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.250 மட்டுமே வரவு வைக்கப்படு கிறது.

இதுகுறித்து தனியார் காஸ் ஏஜென்சியில் விசாரித்தபோது, “இத்திட்டம் தொடங்கியபோது முன்பணமாக ரூ.435-ம், ஜனவரி 1-ம் தேதி முதல் முன்பணமாக ரூ.568-ம் நுகர்வோர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் மானியத் தொகை எவ்வளவோ அதே அளவுத் தொகையே முன்பணமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சிலிண்டரின் சந்தை விலையில் ஏற்படும் மாற்றத்துக்கேற்ப வரவு வைக்கப்படும் முன்பணமும் (முதல் சிலிண்டர் பெறும்போது மட்டும் வழங்கப்படும்), மானியத் தொகை யும் வேறுபடும்” என்றனர்.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் மானியத் தொகை எவ்வளவோ அதே அளவுத் தொகையே முன்பணமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x