Published : 18 Jun 2015 08:14 AM
Last Updated : 18 Jun 2015 08:14 AM

பெரியாறு அணை அருகே புதிய அணை ஆய்வுப் பணி நிறைவு: கேரளா விரைவில் அறிக்கை தாக்கல்

முல்லை பெரியாறு அணை குறித்து கேரள அரசு பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தேக்கடி புலிகள் சரணாலயம் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு பணிக்கு கேரள அரசுக்கு அனுமதி வழங்கியது. அதை பயன்படுத்தி, பெரியாறு அணையில் இருந்து சுமார் 600 மீட்டர் தூரத்தில் புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு இறங்கியது.

இதற்கான ஆய்வுப் பணியை மேற்கொள்ள, திருவனந்தபுரத் தில் உள்ள இன்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது. கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த ஆய்வுப் பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

கேரள நீர் பாசனத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஆய்வுப் பணிகள் முடிந்து, இதன் அறிக்கையை கேரள அரசிடம் நீர்ப் பாசனத்துறை நிர் வாகப் பொறியாளர் விரைவில் ஒப்படைக்க உள்ளார். அந்த அறிக்கையை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத் திடம் தாக்கல் செய்து புதிய அணை கட்ட கேரள அரசு மீண்டும் அனுமதி கோரும்’’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x