Published : 22 Jun 2015 07:20 AM
Last Updated : 22 Jun 2015 07:20 AM

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1,153 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பின

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1,153 எம்பிபிஎஸ் இடங்களும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு பிடிஎஸ் இடமும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நடந்த சிறப்பு பிரிவினருக்காக கலந்தாய்வில் 76 எம்பிபிஎஸ் மற்றும் ஒரு பிடிஎஸ் என மொத்தம் 77 இடங்கள் நிரம்பின. இதையடுத்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 501 மற்றும் தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரியில் ஒன்று என மொத்தம் 502 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டன.

இந்நிலையில் பொதுப் பிரிவினருக்கான 2-ம் நாள் கலந்தாய்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் பங்கேற்க 588 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 580 பேர் பங்கேற்றனர். 2-ம் நாள் கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் 546 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 29 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 575 எம்பிபிஎஸ் இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

கடந்த 3 நாட்களாக நடந்த கலந்தாய்வில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 1,153 எம்பிபிஎஸ் இடங்களும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு பிடிஎஸ் இடமும் நிரப்பப்பட்டுள்ளன. இன்று நடக்கும் 3-ம் நாள் கலந்தாய்வுக்கு 650 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பொதுப் பிரிவினருக்கான 2-ம் நாள் கலந்தாய்வு முடிவில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,138 மற்றும் 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 567 என மொத்தம் 1705 எம்பிபிஎஸ் இடங்களும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 84 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியில் 18, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 39, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 37 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x