Published : 06 Jun 2015 08:15 AM
Last Updated : 06 Jun 2015 08:15 AM
கோக், பெப்சி குளிர்பானங் களுக்கும் தடை விதிக்க வேண்டும் தமிழ்நாடு என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
மேகி நூடுல்ஸுக்கு தமி ழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடை விதிக் கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பன்னாட்டு நிறுவன தயாரிப்புகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்திவரும் தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் ‘தி இந்து’ வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி.
இந்த தடையைப் பற்றி உங் களுடைய கருத்து என்ன?
மேகி நூடுல்ஸை உண்ப தால் கல்லீரல், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு பிரச் சினைகள் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந் நிலையில் மேகி நூடுல் ஸுக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதை வரவேற் கிறோம். தற்போது இந்தத் தடை சில மாதங்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இதை நிரந்தர தடையாக மாற்றவேண்டும். அந்நிறுவனத்தை நாட்டை விட்டே வெளியேற்ற வேண் டும். இதேபோல், அந்நிய தின்பண்டங்களான குர்குரே, பிங்கோ, சீட்டோஸ், உள் ளிட்டவற்றையும் ஆய்வு செய்து தடை விதிக்க வேண்டும்.
கோக், பெப்சி போன்ற குளிர் பானங்களில் 27 மடங்கு ரசா யனம் கலந்துள்ளது நிரூபிக் கப்பட்டும் அவை நம்முடைய சந்தையில் விற்கப்படு கிறதே?
1998-ம் ஆண்டிலே இப் பொருட்களை எதிர்த்து நாங் கள் பல்வேறு போராட் டங்களை நடத்தினோம். இதை யடுத்து அந்நிறுவனத்துக்கு பெரிய சரிவு ஏற்பட்டது. ஆனால், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அந்நிறுவனத்துக்கு ரூ.600 கோடி வரிச்சலுகை அளித்தார். நம்முடைய அரசியல்வாதிகள் அவற்றுக்கு தடை விதிப்பதற்கு பதிலாக ஆதரவுக் கரம் நீட்டினர். மேகி நூடுல்ஸ் மட்டுமல்ல பெப்சி, கோக் ஆகிய நிறுவனங்களையும் நம் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.
இதுபோன்ற பிரச்சினைகளில் வியாபாரிகள் என்ன செய்ய வேண்டும்?
வியாபாரிகள் இதுபோன்ற அந்நிய நாட்டு பொருட்களை விற்பனை செய்ய முன்வரக் கூடாது. அதற்குப் பதிலாக உள்ளூர் தயாரிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வணிகர் சங்கத்தின் சார்பில் இப்பொருட்களை தடை செய்ய என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?
அந்நிய தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று எங்கள் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியாவை வெளிக்கொண்டு வர முயற்சிக்கும் அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக, மே 5-ம் தேதி நடைபெற்ற வணிகர் தினத்தன்று தீர்மானம் இயற்றியுள்ளோம்.
இவ்வாறு வெள்ளையன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT