Published : 15 Jun 2015 07:32 AM
Last Updated : 15 Jun 2015 07:32 AM

மணவை முஸ்தபாவின் 80-ம் ஆண்டு பிறந்த நாள்

அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபாவின் 80-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் தொடக்க விழாவும் நேற்று நடை பெற்றது.

அறிவியல் தமிழ், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினித் துறை சார்ந்த 8 கலைச்சொல் அகராதிகளைத் தொகுத்தவர் மணவை முஸ்தபா. ‘கலைமாமணி விருது’ (1985), ‘ திரு.வி.க.விருது’ (1989) உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற் றுள்ள மணவை முஸ்தபா முப்பதுக் கும் மேற்பட்ட நூல்களை எழுதி யுள்ளார். அவரது 80-வது பிறந்த நாள் விழாவில் அறிவியல் தமிழ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

அந்த அமைப்பின் சார்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ச.முத்துக் குமரன், முனைவர் சாதிக், முனைவர் மறைமலை இலக்கு வனார், முனைவர் அறிவுநம்பி, எழுத்தாளர் சாந்தகுமாரி சிவ கடாட்சம், முனைவர் மலையமான், பன்மொழி அறிஞர் டி.கே.எஸ்.கண்ணன், அறிவியல் அறிஞர் நெல்லை சு.முத்து ஆகிய 9 தமிழ் அறிஞர்களுக்கு ‘அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா- 2015 விருது’ வழங்கப்பட்டது.

குஜராத் மாநில முன்னாள் ஆளுநர் பு.ரா.கோகுலகிருஷ் ணன், தஞ்சை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, டாக்டர் மணிமேகலை கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x