Published : 05 Jun 2015 07:58 AM
Last Updated : 05 Jun 2015 07:58 AM

எம்எஸ்எம்இ-ல் கட்டுமான பொருள் தயாரிப்பு பயிற்சி

கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ மேம்பாட்டு நிறுவனத்தில் கட்டுமான பொருட்கள் தயா ரிப்பு மற்றும் உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி ஜூன் 8 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக எம்எஸ்எம்இ (குறு சிறு நடுத்தர தொழிலகங் கள்) மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இம்மையம் சார்பில் கட்டுமானத்துக்கு தேவையான நிலக்கரி சாம்பல் கற்கள், சிமெண்ட் ஹாலோ மற்றும் சாலிட் பிளாக்ஸ், சிமெண்ட் டெகரேட்டிவ் டைல்ஸ், சிமெண்ட் இன்டர்லாக்கிங் பிளாக்ஸ், சிமெண்ட் பேவிங் பிளாக்ஸ் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மேலும் பழச்சாறு, ஜாம், ஊறுகாய், மசாலா மிக்ஸ் மற்றும் உடனடி உணவு பொருட் களை வர்த்தக ரீதியில் தயாரிப்பு பயிற்சியும் வழங்கப்பட உள் ளது.

விவரங்களுக்கு..

இவ்விரு பயிற்சி வகுப்பு களும் ஜூன் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சிகளில் 18 வயது நிரம்பிய இருபாலரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9940318891 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x