Published : 11 Jun 2015 07:52 AM
Last Updated : 11 Jun 2015 07:52 AM

ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல்: 1,191 அலுவலர்களுக்கு பயிற்சி

ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் 1,191 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதிக் கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இத்தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 230 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த மையங்களில் முதன்மை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக 1,191 மத்திய, மாநில அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு 90 முதன்மை பயிற்சியாளர்களை கொண்டு 4 கட்டங்களாக பயிற்சி அளிக்கப் படுகிறது.

முதல்கட்டமாக நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள, பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த புத்தாக்க பயிற்சி வகுப்பில் தேர்தல் நடைமுறைகள், வாக்குப்பதிவின் போது கடைபிடிக்கப்படும் வழிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, மாதிரி வாக்குப் பதிவு மற்றும் தேர்தல் தொடர்பான இதர பொருட்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. மேலும் மாதிரி வாக்குச்சாவடி மையம் ஒன்று அமைக்கப்பட்டு மாதிரி வாக்குப் பதிவும் நடத்தப் பட்டது.

இப்பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி வாக்குச் சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி, துணை ஆணையர் எஸ்.செந்தாமரை, மாவட்ட வருவாய் அலுவலர் அழகுமீனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x