Published : 12 Jun 2015 08:45 AM
Last Updated : 12 Jun 2015 08:45 AM

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு குறைந்த பகுதிகளில் மக்களுக்கு அழைப்பிதழ் விநியோகம்: விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் துறை ஏற்பாடு

கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்குப்பதிவு குறைவாக இருந்த பகுதிகளை தேர்வு செய்து, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தேர்தல் துறை இறங்கியுள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதி கரிக்கச் செய்யும் பணிகளில் தேர் தல் துறை ஈடுபட்டுள்ளது. தேர் தலில் வாக்களிப்பதன் அவசி யத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்த லின்போது வட சென்னை மக் களவைத் தொகுதிக்குட்பட்ட ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதியில் குறைந்த சதவீத வாக்குகள் பதிவான வாக்குச் சாவடி மையங்கள் தேர்வு செய்யப் பட்டன. அந்த மையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் வாக் காளர்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில், ‘வாக் களிக்க தகுதியுள்ள அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக் களிக்க வேண்டும்’ என வர வேற்று திருமண அழைப்பிதழ் போன்று தேர்தல் விழா அழைப்பிதழ் அச்சிட்டு வீடுதோறும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிகக் குறைந்தபட்சமாக 43 சதவீத வாக்குகள் பதிவான புதுவண்ணாரப்பேட்டை, எம்பிடி குடியிருப்பு பகுதிகளில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எ.சுந்தரவல்லி, நேற்று வீடு வீடாகச் சென்று தேர்தல் விழா அழைப்பிதழ்களை வழங்கி விழிப்புணர்வு பணியை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு களின் பிரதிநிதிகள் வீடு வீடாகச் சென்று தேர்தல் விழா அழைப்பிதழ்களை வழங்கி, அனைவரும் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x