Published : 08 Jun 2015 10:33 AM
Last Updated : 08 Jun 2015 10:33 AM

ரூ.10 கோடியில் உருவாகும் 14 ஆர்டீஓக்களின் தேர்வு தளம்: கணினி மயமாக்கும் பணியை முடிக்க தீவிரம்

தமிழகத்தில் உள்ள 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருக்கும் தேர்வு தளங்களை ரூ.10 கோடியில் கணினி மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இன்னும் 4 மாதங்களில் பணிகள் முடியும் என போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்துகளுக்கு 90 சதவீதம் ஓட்டுநர்களின் கவனக் குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, ஓட்டுநர் உரிமம் வழங்குவது தரமாக இருக்க, சாலை விபத்துக்களை தடுக்க மொத்தமுள்ள 42 போக்குவரத்து ஓட்டுநர் தேர்வுத் தளங்களை கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங்களாக மாற்ற அரசு முடிவெடுத்து அறிவித்தது.

இந்நிலையில், முதல்கட்டமாக திருவண்ணாமலை, நாமக்கல் (வடக்கு), கடலூர், சேலம் (மேற்கு), திண்டுக்கல், திருச்சி (மேற்கு), கரூர், ஈரோடு, மதுரை (வடக்கு), விருதுநகர், கோயம்புத் தூர் (மையம்), திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சங்ககிரி ஆகிய 14 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை கணினி மய மாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங் களாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக போக்கு வரத்து துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஓட்டுநர்களின் தரத்தை உயர்த் தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கும்மிடிப்பூண்டியில் சர்வதேச ஓட்டுநர்கள் பயிற்சி மையத்தை கட்டி வருகிறது. மேலும், தகுதியுள்ளவர்களே ஓட்டுநர் உரிமம் பெறும் வகையில் புதிய நடைமுறை கொண்டுவரவுள்ளது.

அதாவது, கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங்கள் மூலம் ஓட்டுநர் உரிமத் தேர்வு நடத்தப்படும் போது, தேர்வு முடிவுகள் அனைத் தும் கணினி வரைபடம் மூலம் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு, திறமையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். வாகன விபத்துக்கள் பெருமளவில் குறைவதற்கு வழிவகை ஏற்படும்.

தமிழகத்தில் உள்ள 14 ஆர்டீ ஓக்களுக்கு இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளை பொதுப் பணித்துறை 80 சதவீதம் முடித் துள்ளது. தேர்வு தளம் அமைக்கும் பணிக்கு கணினி மென் பொருள் அமைத்துதர டெண்டர் விடப்பட்டு பணிகளை மேற் கொள்ளவுள்ளோம். அடுத்த 4 அல்லது 6 மாதங்களில் ஒட்டு மொத்த பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x