Last Updated : 11 Jun, 2015 08:13 AM

 

Published : 11 Jun 2015 08:13 AM
Last Updated : 11 Jun 2015 08:13 AM

எஸ்கலேட்டரில் சிக்கியதில் விபத்து: குழந்தையின் கை விரல்களை ஒட்ட வைக்க 10 மணி நேரம் சிகிச்சை

எஸ்கலேட்டரில் சிக்கி விபத்துக்குள் ளான குழந்தையின் கை விரல்கள் 10 மணிநேர அறுவைச் சிகிச்சைக்கு பிறகு ஒட்ட வைக்கப்பட்டன.

கர்நாடக மாநிலம் பெங்களூ ருவை சேர்ந்தவர் சந்தோஷ்ராம் (33). இவரது மனைவி சவுமியா (30). இவர்களின் இரண்டரை வயது ஆண் குழந்தை ரிஷி. சந்தோஷ் ராம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சிந்தாதிரிப் பேட்டையில் உறவினர் வீட்டுக்கு கடந்த 8-ம் தேதி வந்தார். நேற்று முன்தினம் ஷாப்பிங் செய்வதற்காக அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவுக்கு குடும் பத்துடன் சென்றார்.

அங்கிருந்த எஸ்கலேட்டரில் செல்லும் போது, குழந்தையின் கை எஸ்கலேட்டரில் தவறுதலாக சிக்கிக் கொண்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சவுமியா, குழந்தையை காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் குழந்தையின் வலது கையின் 3 விரல்கள் நசுங்கி துண்டாயின. இதையடுத்து அவர்கள் குழந் தையை தூக்கிக் கொண்டு துண்டான விரல்களுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றனர். பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் இருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து விட்டு, குழந்தையின் துண்டான விரல்களை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்று தெரிவித்தனர்.

10 மணி நேர அறுவை சிகிச்சை

இதைத் தொடர்ந்து கீழ்ப்பாக் கத்தில் உள்ள ரைட் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தையை அனுமதித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் உடனடி யாக குழந்தையின் துண்டான விரல்களை ஒட்ட வைக்க முடிவு செய்தனர். அதன்படி பிளாஸ்டிக் சர்ஜரி துறை டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் டாக்டர்கள் சிவக்குமார், விஜய ராகவன், சோமேஷ் பாலகிருஷ் ணன் மற்றும் மயக்க டாக்டர் அபினேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சுமார் 10 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையின் துண்டான விரல்களை ஒட்ட வைத்தனர்.

50 சதவீதம் வெற்றி

இது தொடர்பாக டாக்டர் பால கிருஷ்ணன் கூறியதாவது:

குழந்தையின் கையில் 3 விரல்கள் நசுங்கி துண்டாகி இருந்தது. அதனால் கை விரல் களில் இருந்த ரத்த நாளங்கள் சேதமடைந்துவிட்டன. இதனால் கால்களில் இருந்து ரத்த நாளங்களை எடுத்து கைகளில் வைத்து துண்டான விரல்களை ஒட்ட வைத்துள்ளோம். இந்த பிளாஸ்டிக் சர்ஜரி மாலை 4 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மொத்தம் 10 மணி நேரம் நடந்தது. இந்த அறுவைச் சிகிச்சையை 50 சதவீதம் வெற்றி என்று சொல்ல முடியும். குழந்தையின் கை விரல்களில் காயங்கள் குண மாகியபின், விரல்களை நீட்டி மடக்க பிசியோதரப்பி சிகிச்சை கொடுக்கவுள்ளோம். அதன் பின்னர்தான் எதையும் சொல்ல முடியும். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந் தையை, தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றிவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தையின் தாய் சவுமியா கூறும்போது, “எனது குழந்தையின் துண்டான விரல்களை ஒட்ட வைத்து காப்பாற்றிய டாக்டர் களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தை இப்போது நன்றாக இருக்கிறான்” என்றார்.

டாக்டர் விளக்கம்

குழந்தையின் துண்டான விரல்களை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்று தெரிவித்தது பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி துறை தலைவர் டாக்டர் ரமாதேவி கூறும்போது, “நாங்கள் துண்டான விரல்களை ஒட்ட வைக்க முடியாது என்று சொல்லவில்லை. குழந்தையின் கை விரல்கள் நசுங்கிவிட்டன. அதனால் விரல்களை மீண்டும் ஒட்ட வைப்பது கடினம். ஆனாலும் முயற்சி செய்து பார்க்கிறோம் என்றுதான் கூறினோம். அதற்கு பெற்றோர், முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்றால் குழந்தையை அனுமதிக்கிறோம். இல்லையென்றால் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றனர். எங்களால் எந்த உத்திர வாதத்தையும் கொடுக்க முடி யாது என்று தெரிவித்தோம். அதன்பின், பெற்றோர் குழந்தையை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x