Published : 10 Jun 2015 07:55 AM
Last Updated : 10 Jun 2015 07:55 AM

காஞ்சி, திருவள்ளூரில் சிஐடியு சாலை மறியல்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, சிஐ டியு சார்பில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டத்தில் சாலை மறியல் நடந்தது. இதில் ஏராளமானோர் 458 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. ‘மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித் தும், அனைத்துத் தொழிலாளர் களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

டாஸ்மாக், உள்ளாட்சி, சத் துணவு, கூட்டுறவு போன்ற துறை களில் பணியாற்றும் ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. தொழிலாளர் நலச் சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலும், பன்னாட்டு நிறுவனங் கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ. 15 ஆயிரத்தை குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்ய வேண்டும். சங்கம் அமைத்ததற் காக பழிவாங்கப்பட்ட தொழி லாளர்கள் மீதான பொய் வழக்கு களை திரும்பப் பெற வேண்டும். தொழிற்சங்க ஊர்வலம், பொதுக் கூட்டம் ஆகியவற்றுக்கு நீதிமன்றங் கள் தடை செய்யக் கூடாது. முறை சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப் படும் ஓய்வூதியத்தை ரூ. 4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் நகரில் உள்ள காந்தி சாலையில் சிஐடியு தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ஆறு முகம், சிப்பந்தி ஊழியர் சங்கத் தலைவர் வாசுதேவன், கைத் தறி சங்கச் செயலாளர் ஜீவா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர் களை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து, மாலையில் விடுவித்தனர்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் பஸ் நிலையம், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, பாடியநல்லூர், மீஞ்சூர் ஆகிய இடங்களில் சாலை மறியல் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற 46 பெண்கள் உட்பட 458 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் திருமண மண்டபங்களில் தங்கை வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x