Published : 24 Jun 2015 07:28 AM
Last Updated : 24 Jun 2015 07:28 AM

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறை வாடகை பாக்கி ரூ.29 லட்சம்: ஜூலை 10-ம் தேதிக்குள் செலுத்த கெடு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான அறை களின் வாடகை பாக்கி ரூ.29 லட்சத்தை ஜூலை 10-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் அறை ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு பழைய மற்றும் புதிய சேம்பரில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு சேம்பர்களிலும் சுமார் 500 அறைகள் உள்ளன. வழக்கறிஞருக்கு ஒதுக்கப்படும் அறையில் ஒருவர் முதல் 10 பேர் வரை இருக்கின்றனர். 485 அறைகளில் உள்ள வழக்கறிஞர்கள் 29 லட்சத்து 13 ஆயிரத்து 388 ரூபாயை வாடகை மற்றும் மின்கட்டண பாக்கி வைத்துள்ளனர்.

இதுகுறித்து உயர் நீதிமன்ற இணையதளத்தில் பதிவாளர் (நிர்வாகம்) வி.விஜயன் வெளியிட் டுள்ள அறிவிக்கை விவரம்: இம்மாதம் 1-ம் தேதி நிலவரப்படி, வழக்கறிஞர்கள் அறைக்கான வாடகை மற்றும் இதர கட்டணங் களாக ரூ.29,13,388-ஐ வழக்க றிஞர்கள் செலுத்த வேண்டியுள் ளது. இத்தொகை செலுத்தும் படி அறிவிக்கை வெளியிட்டும், தனித்தனியாக வழக்கறிஞர் களுக்கு நோட்டீஸும் அனுப்பப் பட்டது. அதன்பிறகும் இதை யாரும் சட்டை செய்யவில்லை. அதனால் வாடகை மற்றும் இதர கட்டணங்களின் நிலுவைத் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, ரூ.3 ஆயிரத்துக்கு மேல் வாடகை பாக்கி வைத்திருக்கும் வழக் கறிஞர்கள் வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் அதனைச் செலுத் தாவிட்டால் மேலும் நோட்டீஸ் அனுப்பாமல், அவர்களது அறை ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும். எனவே, வாடகை பாக்கியை செலுத்தும்படி வழக் கறிஞர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்று உயர் நீதி மன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x