Published : 27 Jun 2015 08:34 AM
Last Updated : 27 Jun 2015 08:34 AM

ரூ.73 கோடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர் விடுதிகள், அறிவியல் ஆய்வகங்கள், சமுதாய நலக்கூடங்கள் என ரூ.72.93 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சமூக, பொருளாதார வாழ்வில் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், கல்வி வளர்ச்சியையும் பெருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை - கறம்பக்குடியில் 5,230 சதுர அடி பரப்பில் சமையலறை, உணவு அருந்தும் கூடம், விடுதி விளக்குகளுக்கான மின்சாரம் தயாரிக்க 5 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் சாதனம் உள்ளிட்ட வசதிகளுடன் 50 மாணவியர் தங்கும் வகையில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட விடுதிக் கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல்,தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள் ளூர், திருவண்ணாமலை,வேலூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், ராமநாதபுரம், விருதுநகர், நாகை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, சிவகங்கை, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, அரியலூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் 83 இடங்களில் ரூ.66 கோடியே 88 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி, தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர் விடுதி கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இதுதவிர, காஞ்சிபுரம், கடலூர், கரூர் மற்றும் கோவையில் ரூ.91.80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

சமுதாய கூடங்கள்

ஏழை மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை அனைத்து வசதி களுடன் கொண்டாடும் வகையில், திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மதுரை, புதுக் கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், திருப்பூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 24 இடங்களில் ரூ.3 கோடியே 37 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் சமுதாய நலக்கூடங் கள் கட்டப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் பரமானந்தலில் ரூ.76 லட்சத்தில் கட்டப்பட்ட தரைப்பாலம், அணுகு சாலை என, மொத்தம் 72 கோடியே 93 லட்சத்து 61 ஆயிரம் ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில். அமைச்சர்கள் என்.சுப்ரமணியன், சி.விஜயபாஸ் கர், தலைமைச் செயலர் கு.ஞான தேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தாட்கோ தலைவர் எஸ்.கலைச்செல்வன், ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை செயலர் பொ.சிவசங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x