Published : 15 Jun 2015 07:55 AM
Last Updated : 15 Jun 2015 07:55 AM
ஐ.நா. அகதிகள் ஆணையப் பட்ட யத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடு மாறன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அமைப்பின் 8-வது மாநாடு தஞ்சை முள்ளிவாய்க் கால் முற்றத்தில் நேற்று நடை பெற்றது. இதில் பங்கேற்ற பழ.நெடுமாறன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
இந்தியாவுக்குள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் அகதி களை, ஐ.நா. அகதிகள் ஆணைய நெறிமுறைப்படி இந்தியா நடத்த வில்லை. உரிய முறைப்படி நடத்த முடியாவிட்டால், அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஐ.நா. ஆணையத்திடமே ஒப்படைக்க வேண்டும். அதேபோல, ஐ.நா. அகதிகள் ஆணையப் பட்டயத்தில் இந்தியா கையெழுத்திட வேண் டும். இலங்கையில் நடந்த இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.
தென்னாப்பிரிக்கா, பர்மா, மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் தமிழர்களின் குழந் தைகள் தமிழ் கற்கவும், பட்ட மேற்படிப்பு வரை கல்வி கற்கவும் அந்த நாடுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு தமிழக அரசு உதவ வேண்டும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தும் உலகத் தமிழ் மன்றத்துக்கு நிலை யான அலுவலகம் இல்லை. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நிரந்தர அலுவலகம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
அமெரிக்காவில் நடைபெற வுள்ள 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் தமிழறிஞர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும். பல்வேறு நாடு களில் வாழும் தமிழர்கள் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்களின் நலன் காக்க ‘வெளி நாடு வாழ் தமிழர் இயக்ககத்தை’ தமிழக அரசு உருவாக்க வேண்டும். மத்திய அரசால் நடத்தப் படும் தஞ்சை தென்னகப் பண் பாட்டு மையத்தில் தமிழ்க் கலை கள், கலைஞர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றார்.
மாநாட்டில், இரா.செழியன், தமிழண்ணல், ச.வே.சுப்பிரமணி யம், க.ப.அறவாணன் ஆகியோ ருக்கு ‘உலகப் பெருந்தமிழர் விருது’ வழங்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, நெடுஞ் செழியன், தொ.பரமசிவம், விஐடி பல்கலைகலைக் கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், பெ.மணியரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT