Published : 23 Jun 2015 07:01 PM
Last Updated : 23 Jun 2015 07:01 PM

கரூரில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகனம்

கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், 31 மாவட்டங்களுக்கு நடமாடும் சிகிச்சை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சேவையை முதல்வர் ஜெயலலிதா கடந்த 16-ம் தேதி தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகனத்தை, ஆட்சியர் ச.ஜெயந்தி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, “பிறந்தது முதல் 14 வயது வரையுள்ள மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில், ரூ.11.50 லட்சம் மதிப்பிலான உட்கட்டமைப்பு வசதிகள் இந்த வாகனத்தில் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு வாகனத்தில், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு பிஸியோதெரபி, பேச்சுப் பயிற்சி, உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு செய்தல், விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல், அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக முடநீக்கு வல்லுநர் மற்றும் பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் ஆகியோர் மேற்கொள்வர். இந்த வசதியை மாற்றுத் திறன் குழந்தைகளின் பெற்றோர் பயன்படுத்தி கொள்ளலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x