Published : 02 Jun 2015 07:26 AM
Last Updated : 02 Jun 2015 07:26 AM

உயர் நீதிமன்ற காவல் நிலையத்தை வழக்கறிஞர்கள் முற்றுகை

வழக்கறிஞரை தாக்கிய வர்களை கைது செய்யக்கோரி உயர் நீதிமன்ற காவல் நிலை யத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்சியை சேர்ந்த பாக்கிய வாசன் டாக்டராக பணியாற்று கிறார். இவருக்கும், சென்னை வடபழனியை சேர்ந்த கஜ லட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர் களுக்கு ஆஷிகா(2) என்ற மகள் இருக்கிறாள். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். டாக்டர் பாக்கிய வாசன் தனது மகளை சந்தித்து பேச குடும்பநல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த 27-ம் தேதி சென்னை குடும்பநல நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பாக்கியவாசன், தனது மகளை சந்தித்து பேசினார். அப்போது அவரது வழக்கறிஞர் பி.பாபு, அவரது மனைவியும் வழக்கறி ஞருமான மஞ்சு ஆகியோரும் உடன் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த கஜலட்சுமியின் தந்தை முரளி, சகோதரர் ஜெயச்சந்திரன் உள் ளிட்டோர் ஒரு கட்சி பிரமுகரை பார்க்க வருமாறு அவர் களை அழைக்க, அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் பாக்கிய வாசனும், பாபுவும் தாக்கப்பட் டதாக கூறப்படுகிறது.

இது குறித்து உயர் நீதி மன்ற காவல் நிலையத்தில் வழக்கறிஞர் பாபு புகார் கொடுக்க, போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோடை விடு முறை முடிந்து நேற்று காலை யில் நீதிமன்றங்கள் திறக்கப் பட்டன. அப்போது குடும்பநல நீதிமன்றத்தின் வாயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக் கறிஞர்கள் சேர்ந்து நின்று வழக்கறிஞர்களை தாக்கியவர் களை கைது செய்ய வேண்டும் என்றும், போலீஸாரை கண் டித்தும் கோஷங்களை எழுப் பினர். பின்னர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு அதே கோரிக்கையை வலி யுறுத்தி போராட்டம் நடத்தப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x