Published : 03 Jun 2015 08:02 AM
Last Updated : 03 Jun 2015 08:02 AM

தமிழக காங்கிரஸ் செயற்குழு சென்னையில் இன்று கூடுகிறது: ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து முடிவு

காங்கிரஸ் கட்சியின் மாநில செயற் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் இன்று நடக்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தேசிய பொதுச்செயலா ளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் பங்கேற்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த அகில இந்திய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தி, விரைவில் தமிழகம் வர இருக்கிறார். தஞ்சை, திருச்சியில் அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடு களை அக்கட்சியினர் செய்து வருகின்றனர். இதுகுறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என வடசென்னை மாவட்ட காங்கிர ஸார் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, இதுகுறித்து செயற் குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், உறுப்பினர் சேர்க்கை, தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட சிலர் பங்கேற்கவில்லை. ‘‘கட்சி விதி களின்படி 3 முறை தொடர்ச்சியாக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற் காதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைமைக்கு அதிகாரம் உண்டு’’ என அப்போது இளங்கோவன் எச்சரித்திருந்தார்.

தொடர்ந்து 3 முறை செயற் குழுவில் பங்கேற்காத தங்க பாலுவுக்கு எச்சரிக்கை விடும் வகையிலேயே அவர் பேசியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்பார்களா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

பாஜக ஆலோசனை

ஆர்.கே.நகரில் போட்டியிடுவது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் அக்கட்சி யின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த சில நாள் களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் டெல்லி செல்லும் முன்பு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் பேசிய தமிழிசை, ‘‘ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைவர் அமித்ஷாவுடன் விவாதித்து முடிவு செய்வோம்’’ என்றார்.

மார்க்சிஸ்ட் இன்று முடிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற வுள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது என இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு கூட்டம் முடிந்ததும், இரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் ஆலோ சனை நடத்தவுள்ளனர். அதில் ஆர்.கே.நகரில் எந்தக் கட்சி போட்டியிடுவது என்பது முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

தமாகா போட்டி இல்லை

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தமாகா நிர்வாகிகள், செயல்வீரர்களிடம் ஆலோசனை நடத்தினோம். இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியின் செயல் பாடுகளை கணிக்கிற தேர்தலாக அமைய வேண்டும். ஆனால், தமிழகத்தில் கடந்த 2001 முதல் இதுவரை நடைபெற்ற 22 இடைத் தேர்தல் களில் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளன. எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு வாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x