Published : 23 Jun 2015 07:58 AM
Last Updated : 23 Jun 2015 07:58 AM

‘இனிமேல் விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சு இல்லை’: மமக நிர்வாகி எம்.ஹெச்.ஜவாஹிருல்லா திட்டவட்டம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நம்பிக்கைக்குரியவராக இல்லை. எனவே, கூட்டணி குறித்து அவ ரோடு பேசும் சிந்தனை எங்களுக்கு இல்லை என மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

தேர்தல் வந்தால் மட்டுமே மமக இருப்பது வெளியில் தெரிகிறது. மற்ற நேரங்களில் அமைதியாகி விடுகிறீர்களே?

இது முற்றிலும் தவறான கருத்து. 2009-ல் கட்சி ஆரம்பித்து குறுகிய நாட்களுக்குள்ளாகவே நாடாளுமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொண்டோம். அப்போது போட்டியிட்ட நான்கு தொகுதிக ளில் மட்டுமே 4 சதவீத வாக்குக ளைப் பெற்றோம். அடுத்து வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மூன்று இடங்களில் போட்டியிட்டு இரண்டு தொகுதி களை வென்றோம். இப்போது தமிழகம் முழுவதும் மமக உள் ளாட்சி பிரதிநிதிகள் சுமார் 160 பேர் உள்ளனர். கடந்த காலங்களில் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினை களுக்காக அழுத்தமான பதிவுகளை யும் போராட்டங்களையும் முன் னெடுத்துச் சென்றிருக்கிறோம். குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் பாது காப்பு, மதுவிலக்கு உள்ளிட்டவை களுக்காக சட்டப்பேரவைக்கு உள் ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராடி வருகிறோம்.

இஸ்லாமிய இயக்கங்கள் புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கின் றன. உங்களுக்குள்ளேயே ஒரு புரிதல் இல்லாததால்தான் இத்தகைய பிளவுகளா?

ஜனநாயக நாட்டில் அமைப்புகள் தொடங்குவது எளிது. லெட்டர்பேடு இருந்தால் கட்சி தொடங்கி விடலாம். இஸ்லாமிய இயக்கங்களுக்கு மாத்திரமல்ல.. இது எல்லா இயக் கங்களுக்கும் பொருந்தும். ஆனால், சுயலாபத்துக்காகவும் சுய விளம் பரத்துக்காகவும் அமைப்புகளை தொடங்குபவர்கள் யார் என்ப தையும் பொதுநலனுக்காக அமைப்பு நடத்துகிறவர்கள் யார் என்பதையும் மக்கள் தெளிவாகவே புரிந்துவைத்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் விஜய காந்தை திமுக கூட்டணிக்குள் கொண்டுவர பெரும் முயற்சி எடுத் தீர்கள். அத்தகைய முயற்சியை இம்முறையும் மேற்கொள்வீர்களா?

அப்படியொரு முயற்சி எடுக் கும் சிந்தனை எங்களுக்கு இல்லை. காரணம், விஜயகாந்த் நம்பிக்கைக் குரியவராக இல்லை. கடந்தமுறை எங்களது பொதுச் செயலாளர் அன்சாரி கோலாலம்பூர் வரைக்கும் போய் விஜயகாந்திடம் பேசினார். அவர் எங்களிடம் பேசியது ஒன்றாகவும் அதன் பிறகு பேசியது வேறொன்றாகவும் இருந்தது. அவர் என்ன பேசுகிறார் என்று மக்களுக்கும் புரியவில்லை; அவ ருக்கும் தெரியவில்லை. அவரை யார் ஆட்டுவிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று கருணாநிதியும் ஜெயலலிதா வும் சொல்லிக் கொள்கிறார்கள். நீங் கள் இவர்களில் யாரை நம்புகிறீர்கள்?

கருணாநிதியும் ஜெயலலிதாவும் சிறுபான்மையினர் நலனுக்கான திட்டங்களை தந்திருப்பதை நாங் கள் மறுக்கவில்லை. எனினும் நாங் கள் இந்திய அரசியல் சாசனத்தை தான் முழுமையாக நம்புகிறோம். அதுதான் எங்களுக்கான பாதுகாப்பு மையமாக இருக்கிறது. அதன்படி யார் செயல்படுகிறார்களோ அவர் களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

இஸ்லாமிய இயக்கங்களை கூட்ட ணியில் வைத்துக் கொண்டு போலி யாக மதச்சார்பின்மை பேசுகிறார் கருணாநிதி என்கிறார்களே?

இந்தியா மதச்சார்பற்ற நாடு. சிறுபான்மையினருக்கு எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண் டும் என்கிறது நமது அரசியல் சாசனம். கருணாநிதியும் ஜெய லலிதாவும் சிறுபான்மையினருக்கு நிறையவே செய்திருக்கிறார்கள். அவை அனைத்துமே அரசியல மைப்புக்கு உட்பட்டுத்தானே தவிர அரசியலமைப்புக்கு விரோதமாக அல்ல என்பதை இந்தக் குற்றச் சாட்டை முன்வைக்கும் பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

தங்களின் ஓராண்டு ஆட்சியில் இந் தியா வளர்ச்சிப் பாதையில் பயணிப் பதாகச் சொல்கிறதே பாஜக?

உண்மைதான். மிகப்பெரிய செல்வந்தர்களிடமும் கோடீஸ் வரர்களிடமும் செல்வம் வளர்ச்சி யடைகிறது. இன்னமும் அவர்கள் வளர்ச்சியடைவார்கள். ஆனால், நடுத்தர, ஏழை மக்களுக்கு இந்த வளர்ச்சியின் பயன் சென்றடையாது என்பதுதான் உண்மை.

அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப் படையில் உதவியதுபோல தாவூத் இப்ராஹிமுக்கும் உதவுவாரா என்று காங்கிரஸ் கேட்பது சரி என்கிறீர்களா?

தாவூத்தாக இருந்தாலும் லலித்மோடியாக இருந்தாலும் ஒரே மாதிரியான அணுகுமுறை யைத்தான் பின்பற்ற வேண்டும். ஆனால், ஆஸ்திரேலியாவில் வங்கிக் கடன் மறுக்கப்பட்ட அதானியை கையோடு அழைத்துச் சென்று பாரத ஸ்டேட் வங்கியில் ஆறாயிரம் கோடி கடன் கொடுக்கச் சொன்னவர்கள், இப்போது, பொருளாதாரக் குற்றவாளிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவினோம் என்று முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கிறார்கள்.

பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் மக்களைப் பற்றி..?

தீங்கு என்று தெரிந்தும் காசு கொடுத்து சிகரெட் வாங்கிப் புகைப் பதைப் போல, புகையிலை வாங்கிச் சுவைப்பதைப் போல தங்களுக்கு தீமை என்று தெரிந்தும் நூறுக்கும் இருநூறுக்கும் விலைமதிப்பற்ற வாக்குரிமையை விற்கிறார்கள். இன்றைக்கு காசு கொடுத்து ஓட்டு வாங்குபவர்களிடம் நாளைக்கு காசு கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்பதை உணரும் நிலை யில் மக்கள் இல்லை. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அரசியல் எங் களிடம் எந்தக் காலத்திலும் இருக்காது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x