Published : 13 Jun 2015 10:15 AM
Last Updated : 13 Jun 2015 10:15 AM

உயிருக்கு ஆபத்து: முதல்வரின் தனிப்பிரிவில் ரவிசுப்ரமணியம் மனு

ஜெயேந்திரரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவில் ரவி சுப்ரமணியம் மனு அளித்துள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய ரவி சுப்ரமணியம் நேற்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனி்ப்பிரிவில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை மற்றும் மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப் பட்ட வழக்குகளில் 2005-ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டேன். 2 வழக்குகளிலும் அப்ரூவராக மாறினேன். இதனால் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரர் உள்ளிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட் டது. அவர்களுக்கு தண்டனை கிடைக் கும் நிலை ஏற்பட்டதால் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று எனக்கு ஜாமீன் வழங்காமல் சிறையில் வைத்திருந்தனர்.

ஆனால், முன்னாள் சிறைத்துறை டிஐஜியும் தற்போது காஞ்சி மடத்தின் பல்கலைக்கழக முதன்மை நிர்வாக அதிகாரியுமான ராமச்சந்திரன் உதவியுடன், தாதா அப்பு மற்றும் கதிரவன் மூலம் என்னை மிரட்டி பிறழ்சாட்சியாக மாற்றினர். அவர்கள் அனைவரும் சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை பெற்றனர்.

ஆனால், பிறழ்சாட்சி சொல்லி குற்றவாளிகளை தப்பிக்க விட்டதால் மனசாட்சி உறுத்தியது. இதனால், கடந்த 8-ம் தேதி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப் பட்ட வழக்கில் ஆஜராகும் சிறப்பு வழக்கறிஞரை சந்தித்து நடந்த உண்மைகளை கூற விரும்புவதாக தெரிவித்தேன். இதை வழக்கறிஞர் கள் மூலம் அறிந்த ஜெயேந்தி ரர், “எனக்கெதிராக சாட்சி சொல்லப் போகிறாயா? சங்கரராமனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும்” என்று மிரட்டினார். அங்கிருந்த சுந்தரேசய்யர் மற்றும் காஞ்சிபுரம் கட்டுப்பாட்டறை யில் பணியாற்றும் எஸ்.எஸ்.ஐ மடத் துக்கண்ணனும் என்னை மிரட்டினர்.

என் உயிருக்கு அவர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. என்னைக் காப்பாற்ற வேண்டும். ஜெயேந்திரர் மற்றும் சுந்தரேசய்யர் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது.

இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ரவிசுப்ரமணியம் புகார் மனு அளித்து்ள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x