Published : 09 Jun 2015 07:50 AM
Last Updated : 09 Jun 2015 07:50 AM

மாணவர் அமைப்புக்கு தடை நீக்கம்: ஐஐடி முடிவுக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை ஐஐடியில் அம்பேத்கர் - பெரியார் பெயரிலான மாணவர் அமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதை திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட் டோர் வரவேற்றுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி:

ஐஐடி விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட்டு அம்பேத் கர் - பெரியார் வாசிப்பு வட்டத் துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிக்கை விடுத்திருந்தேன். மற்ற கட்சிகளும் கண்டன அறிக்கை விடுத்தன. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ஐஐடி நிறுவன இயக்குநருக்கு கடிதம் எழுதியிருந்தார். திமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இதன் விளைவாக தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது. ஐஐடியின் முடிவை வரவேற்பதோடு, வெற்றி பெற போராடியவர்களுக்கு நன்றி.

திமுக பொருளாளர் ஸ்டாலின்:

விவாதங்களுக்கும் கருத்து பரிமாற் றங்களுக்கும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் சுதந்திரம் அளிக்க வேண்டும். நாளைய எதிர்காலமான இளைய தலை முறை ஆக்கப்பூர்வமான விவாதங் களில் பங்கேற்க, ஆட்சேபனைக் குரிய கருத்துகளையும் விவாதிக்க சுதந்திரம் வழங்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

இது மாணவர்களின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இனி மாணவர்கள் படிப் பில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும்.

இந்திய கம்யூ. மாநில செயலாளர் இரா.முத்தரசன்:

மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்து நிர்ப் பந்தம் ஏற்பட்டதன் காரணமாக ஐஐடி நிர்வாகம் தடையை நீக்கியுள்ளது.

இதன்மூலம் மூடப் பழக்க வழக்கங்கள் செல்வாக்கு செலுத்தும் பிற்போக்கு மேலாதிக் கம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:

ஐஐடியில் அம்பேத்கர் - பெரியார் என்ற உணர்வு எரிமலையாக வெடிக்கத் தொடங் கியவுடன் ஐஐடி நிர்வாகம் அடிபணிந்துள்ளது. எனினும், சமூக நீதிக்கான தொடர் போராட்டம் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x