Published : 30 Jun 2015 10:17 AM
Last Updated : 30 Jun 2015 10:17 AM

3.5 கிலோ மட்டுமே எடையுள்ள அபூர்வ புள்ளி எலி மான்கள் அழிந்துவருவதாக தகவல்

இந்திய காடுகளில் உருவத்தில் எலிபோல் 3 முதல் 3.5 கிலோ எடை மட்டுமே உள்ள அபூர்வ வகை இந்திய புள்ளி எலி மான்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மான்களில் இந்திய புள்ளி எலிமான்கள் மிகவும் அபூர்வமானவை. இவை இந்தியாவில் தமிழகம், கேரளம் மற்றும் ராஜஸ் தான் மாநிலங்களில் காணப்படுகின்றன.

‘டிராகுலிடே’ எனும் குடும்பத்தைச் சேர்ந்த புள்ளி எலிமான்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளன. இவற்றின் சிற்றினங்கள் மட்டுமே தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலும், மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் உள்ளன.

இந்த புள்ளி எலி மான்கள் இடத்துக்குத் தகுந்தாற் போல் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. பொதுவாக ‘இந்தியன் செவ்டைன்’ (குட்டி ஆடு) என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இவை இரவில் மட்டுமே நடமாடும். ஆப்பிரிக்காவில் காணப்படும் எலிகள் 4 கிலோ வரை காணப்படுகின்றன.

ஆனால் இந்த எலி மான்கள் 50 முதல் 60 செ.மீ. நீளமும் 3 முதல் 3.5 கிலோகிராம் எடையுடன் உருவத்தில் எலி போல் காணப்படுவதால் புள்ளி எலி மான்கள் என அழைக்கப் படுகின்றன. தற்போது இந்த இந்திய புள்ளி எலிமான்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் வன விலங்கு ஆர்வலர் பேராசிரியர் ராமசுப்பு ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:

‘‘இந்திய புள்ளி எலிமான்கள் பசுமை மாறாக்காடுகள், இலையு திர் காடுகள், மித வெப்ப மண் டலக் காடுகளில் 1,850 மீட்டர் கடல்மட்டத்துக்கு மேல் மறைந்து வாழக்கூடிய குணாதிசயம் கொண் டவை. இவ்வகை மான்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் முண்டந்துறை புலிகள் சரணா லயத்தில் அதிகளவில் காணப்படு கின்றன.

பெரியார் புலிகள் சரணாலயம், இந்திரா காந்தி தேசிய பூங்கா, அமைதி பள்ளத்தாக்கு, பந்திப்பூர் தேசிய பூங்கா, குதிரைமூக்கு தேசிய பூங்கா மற்றும் முதுமலை புலிகள் சரணாலயத்தில் இந்த புள்ளி எலிமான்கள் பரவலாகக் காணப்படுகின்றன. கிழக்கு தொடர்ச்சி மலையில் சில இடங்களில் அபூர்வமாக உள்ளன.

இந்திய புள்ளி எலி மான்கள் சாம்பல் கலந்த செந்நிறத்தில் இருப்பதால் தரைப்பகுதியில் உள்ள காய்ந்த இலைகளுக்கிடையே தங்களை மறைத்துக்கொள்வதற்கு ஏற்ப உடலமைப்பை பெற்றுள்ளன.

மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டதால் இந்த மான்கள் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த காட்டுப்பகுதி, தரைப்பகுதி, திறந்த வெளிப் பகுதியிலும் வாழ்வதைத் தவிர்த்துவிடும். இரவில் மட்டுமே இந்த புள்ளி எலி மான்கள் வெளியே நடமாடும்.

தாவர உண்ணிகளான இவ்வகை மான்கள் இலை, தழை மற்றும் மரத்தில் இருந்து விழும் பழங்களை உண்ணக்கூடியவை. குறிப்பாக இவை, தாண்றிக்காய், குமிழ் மற்றும் கருவிலங்கம் பழங் களை விரும்பி சாப்பிடக்கூடியவை. 5 முதல் 10 மாதங்களில் இனப் பெருக்க முதிர்ச்சி அடைந்துவிடும். அதனால், தாயின் அரவணைப்பு மிகவும் இவ்வகை மான்களுக்கு குறைவு. இவ்வகை மான்கள் காட்டில் தனித்தே நடமாடும். இனப் பெருக்க காலத்தில் மரப்பொந்து கள், பாறை இடுக்குகள், முள் புதர்களில் பதுங்கி வாழும் தன்மை கொண்டவை.

தற்போது இந்திய புள்ளி எலி மான்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித் துள்ளது. காடுகளின் அழிவால் தற்போது மனித நடமாட்டம் மிகுந்த நறுமணத் தோட்டங்கள், அழிக்கப்பட்ட காடுகள் மற்றும் பண்ணைகளில் வாழப் பழகி விட்டன.

இவை காட்டில் சிறுத்தை கள், ஆந்தைகள் போன்றவற்றின் முக்கிய உணவாக இருக்கி றது. தென்னிந்தியாவில் இறைச் சிக்காக இந்திய புள்ளி எலி மான்கள் அதிகளவு வேட்டையாடப் படுகின்றன.

மலைவாழ் மக்களின் வேட்டை யாடும் விலங்குகள் பட்டியலில் இந்திய புள்ளி எலிமான் முதலிடத்தில் உள்ளன. இந்த வகை மான்களை எளிதில் வேட்டையாட முடியும் என்பதால் சிறுவர்கள், பெண்கள்கூட இவற்றை வேட்டையாடுகின்றனர்.

இந்திய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விலங் காகக் காணப்படும் இந்திய புள்ளி எலி மான்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் உள்ளன’’ என்றார். .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x