Published : 22 Jun 2015 07:32 AM
Last Updated : 22 Jun 2015 07:32 AM

சென்னை பல்கலை.யில் 30 மணி நேர யோகா நிகழ்ச்சி: லிம்கா சாதனைக்காக நடத்தப்படுகிறது

சென்னை பல்கலைக்கழகத்தில் 30 மணி நேர தொடர் லிம்கா சாதனைக்காக யோகா நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது.

சென்னை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மற்றும் யோகா துறை மற்றும் மஹாமகரிஷி அறக்கட் டளை மஹாயோகம் இணைந்து சென்னை மருத்துவக் கல்லூரி உடலியங்கியல் துறையின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. மஹாயோகம் அமைப் பைச் சேர்ந்த 20 பேர் 30 மணி நேரம் தொடர்ந்து யோகாசனத்தில் ஈடுபடுகிறார்கள். சென்னை பல் கலைக்கழக துணைவேந்தர் இரா.தாண்டவன் இதைத் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை சிறப்புச் செயலர் ப.செந்தில்குமார், அரசு யோகா மற் றும் இயற்கை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஆர்.எஸ்.ஹிமேஸ்வரி, காவல் பயிற்சிக் கல்லூரி டிஐஜி கே.பெரியய்யா, சென்னை மருத் துவக் கல்லூரி உடலியங்கியல் துறை இயக்குநர் கே.பத்மா, சென்னை பல்கலை. உடற்கல்வி மற்றும் யோகாதுறை தலைவர் வி.மகாதேவன், மகாமகரிஷி அறக் கட்டளை அறங்காவலர் கே.பி.தயா நிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த 30 மணிநேர யோகா நிகழ்ச்சி இன்று பகல் 12 மணிக்கு நிறைவடைகிறது. பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x