Published : 12 Jun 2015 08:42 AM
Last Updated : 12 Jun 2015 08:42 AM

ஆசிய நாடுகளை சுற்றிப் பார்க்க ஐஆர்சிடிசி சுற்றுலா பயணத் திட்டம் அறிவிப்பு

இலங்கை, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா செல் வதற்கான பயணத் திட்டங்களை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய உணவு மற்றும் சுற்று லாக் கழகம் பல்வேறு விதமான பேக்கேஜ்களை வெற்றிகரமாக இயக்கி வருகிறது. கோவா, காஷ்மீர், கேரளா, அந்தமான் மற்றும் சீரடி ஆகிய சுற்றுலா இடங் களுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்த விமான பயணச் சேவை கள் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதை யடுத்து, ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கு புதிய குழுப் பயணங் கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீராமாயண யாத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இலங்கைப் பயணம் ஆகஸ்ட் 8-ம் மற்றும் செப்டம்பர் 19-ம் தேதிகளில் தொடங்குகிறது. இந்த பயணத்தில் 4 இரவுகளும் 5 பகல்களும் அடங் கும். நுவரா இலியா, கண்டி மற்றும் கொழும்பு போன்ற இலங்கை யின் பல பகுதிகளை இந்தப் பயணத் தின்போது சுற்றிப்பார்க்கலாம்.

விமானப்பயண சீட்டுக்கான கட்டணம், தங்கும் இடம், உணவு, சுற்றிப்பார்த்தல், கடவுத்தாள் (விசா) போன்ற அனைத்தும் இந்த பேக்கேஜுக்குள் அடங்கும். ஒரு அறையை இருவர் பகிர்ந்து கொள்ளும் பேக்கேஜ்களுக்கு கட்டணம் ரூ.34,000 ஆகும்.

தாய்லாந்துக்கான சுற்றுலா பயணம் ஜூலை 10, ஆகஸ்ட் 14-ம் தேதிகளில் தொடங்குகிறது. இதில் 4 இரவுகளும், 5 பகல்களும் அடங்கும். இதில் ஒரு அறையை இருவர் பகிர்ந்து கொள்ளும் பேக் கேஜுக்கான கட்டணம் ரூ.37,500 ஆகும். இது தொடர்பாக தகவல் களை தெரிந்துகொள்ள சென்னை : 9840902918, மதுரை: 9003140714, கோவை: 9003140680 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x