Published : 25 Jun 2015 09:50 AM
Last Updated : 25 Jun 2015 09:50 AM

பட்டாசு லாரி தீப்பிடித்து சேதம்: சேத மதிப்பு ரூ.15 லட்சம்

திருச்சி அருகே பட்டாசு மற்றும் தீப்பெட்டிகள் ஏற்றி வந்த லாரி யில் நேற்று அதிகாலை தீப்பற்றி யதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் லாரி ஆகியவை எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி மாவட்டம் எட் டையபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையிலிருந்து பட்டாசுகள் மற்றும் தீப்பெட்டிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்குப் புறப்பட்டது. திருச்சி- சென்னை புறவழிச்சாலையில் சஞ்சீவி நகர் அருகே நேற்று அதிகாலை வந்துகொண்டிருந்தபோது லாரியில் இருந்த பட்டாசு மற்றும் தீப்பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தீப்பற்றியதை அறிந்த லாரி ஓட்டுநர் கோவில்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(48) மற்றும் உதவியாளர் எட்டைய புரத்தைச் சேர்ந்த ஜெயம்(38) ஆகியோர் லாரியை நிறுத்திவிட்டு, தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால், பட்டாசுகள் மற்றும் தீப்பெட்டிகள் மீது தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, தீய ணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். லாரியும் முழுமையாக எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து பட்டாசு ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் கிருஷ்ண மூர்த்தி கூறியபோது, “கோவில் பட்டியில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மதுரை வழியாக வந்துகொண்டி ருந்தபோது, பின்னால் வந்த ஒரு லாரி முந்திச் சென்றது. அப் போது நான் ஓட்டிவந்த லாரியுடன் உரசிக்கொண்டு சென்றது. அப்போது தீப்பொறி ஏற்பட்டு பட்டாசுகளில் தீப் பற்றியிருக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x