Published : 17 Jun 2015 08:32 AM
Last Updated : 17 Jun 2015 08:32 AM
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ளது கோவிந்தம் பாளையம் கிராமம். இந்தக் கிராமத் தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி யில் 120 மாணவ-மாணவிகளும், உயர்நிலைப் பள்ளியில் 192 மாணவ-மாணவிகளும் படிக்கின்ற னர். இந்த மாணவ-மாணவியரை திருக்குறளை மனப்பாடம் செய்ய வைத்து, தமிழ் பற்றும் ஒழுக்கமும் வளரச் செய்யும் முயற்சியில் கோவிந்தம்பாளையம் ஊர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழத்திலேயே முன்னோடி யான இத்திட்டத்தை ஊக்குவிக் கும் முயற்சியில் கோவிந்தம் பாளையம் ஊர் மக்களோடு, பள்ளி யின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அஞ்சல் துறையினரும் கைகோத்துள்ளனர். இந்தத் திட்டத்தின் பெயர் ‘திருக் குறள் சார் அஞ்சலக சிறுசேமிப்பு’.
இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவி களுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டு, ஒவ்வொருவரின் பெயரிலும், திருக்குறளின் மொத்த அதிகாரங்களின் கணக்குப்படி ரூ.133 செலுத்தி புதிய அஞ்சலக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு ரூபாய் வீதம், மாணவரின் சிறுசேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும். குறைந்தபட்சம் 50 திருக்குறள் முதலில் ஒப்புவிக்க வேண்டும்.
திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ-மாணவியர்கள் கணக் கில் வாரம்தோறும், அவர்கள் ஒப்பு வித்த குறளுக்கு ஏற்ப தொகை செலுத்தப்படும். 1330 குறள்களை யும் ஒப்புவிக்கும் மாணவர் களுக்கு, கோவிந்தம்பாளையம் கிராம மக்கள் சார்பில், சிறுசேமிப்பு கணக்கில் ரூ.10,000 செலுத்தப்பட உள்ளது.
இது தவிர மாநிலம் முழுவதும் நடக்கும் திருக்குறள் போட்டிக்கு, கிராம மக்கள் சார்பில், மாணவ- மாணவியரை அனுப்பி வைக்கவும் உள்ளனர்.
திருக்குறள் சார் சிறுசேமிப்பு திட்டத் தொடக்க விழா நாளை (வரும் 18-ம் தேதி) கோவிந்தம்பாளையம் ஊராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடக்கவுள்ளது. தொடக்க விழாவில் ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வி.அழகுவேல் கூறியதாவது:
திருக்குறளை படிக்கும் போதே ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் ஒழுக்கம் தானாக வரும். இந்த திட்டத்தில் சேர பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் திருக்குறளை மனப்பாடம் செய்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும், ஊர் மக்களும் இந்தத் திட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது வரவேற்கத்தக்கது. இதற்கான செலவுகள் அனைத்தையும் ஊர் மக்கள் சார்பாக வழங்கப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT