Published : 25 Jun 2015 10:22 AM
Last Updated : 25 Jun 2015 10:22 AM

அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு நிறைவு: ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிடுகிறது மத்திய அரசு

ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ஆயிரம் மற்றும் பத்து ரூபாய் நாணயங்களை மத்திய அரசு வெளியிடுகிறது.

ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரம் ஆண்டுகள் நிறை வடைந்துள்ளதை போற்றும் விதமாக அவரது உருவம் பொறித்த தபால் தலையை வெளியிடக் கோரி பாஜக எம்.பி. தருண் விஜய் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, கடந்த மார்ச் 20-ல் மத்திய அரசு ராஜேந்திர சோழனுக்கு அஞ்சல் தலையை வெளியிட்டது.

அதற்கு முன்பாகவே, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக் கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக் கையையும் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு விரைவில் நாணயங்களை வெளியிடுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலை வர் பொறியாளர் கோமகன் கூறிய தாவது: ‘‘இதற்கு முன்பு திமுக அரசின் கோரிக்கையை ஏற்று, தஞ்சை பெரிய கோயில் கட்டப் பட்டு ஆயிரம் ஆண்டுகள் பூர்த்தி யானதை ஒட்டி, ராஜராஜ சோழன் உருவம் பொறித்த அஞ்சல் தலையையும் நாணயத்தையும் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு வெளியிட்டது.

தருண் விஜயிடம் கோரிக்கை

அதேபோல் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை நினைவு கூரும் விதமாக அவருக்கும் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று கடந்த ஜனவரியில் கங்கைகொண்ட சோழபுரம் வந்திருந்த தருண் விஜய் எம்.பி.யிடம் குழுமத்தின் சார்பில் கோரிக்கை வைத்தோம். இதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அவர் 13 நிமிடங்கள் பேசினார். உடனடியாக கோரிக்கை ஏற்கப் பட்டு ராஜேந்திர சோழன் அஞ்சல் தலையை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் வெளியிட்டார்.

இதேபோல், ராஜேந்திர சோழ னுக்கு நாணயம் வெளியிடவும், இந்திய கப்பற்படையில் 1997-ல் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ராஜேந்திரா போர் கப்பலுக்கு மீண்டும் ராஜேந்திரா பெயரை சூட்டவும் 3 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த ஆயிரம் மற்றும் பத்து ரூபாய் நாணயங்களை வெளி யிடுகிறது மத்திய அரசு. 3 மாதங் களுக்குள் எங்களது கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நாணயங்கள் வெளியிடும் போது அரசு சார்பில் விழா எடுப்பது வழக்கமில்லை என்பதால் எங்களையே நாணயம் வெளியீட்டு விழாவை நடத்தச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 11-ல் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி ஆதிரை வருவதால் அன்றைய தினம் விழாவை நடத்தலாம் என முடிவெடுத்திருக்கிறோம். நிதி யமைச்சர் அருண் ஜேட்லி நாண யங்களை வெளியிட சம்மதித் திருக்கிறார்.

தஞ்சை அல்லது சென்னையில் விழாவை நடத்த தீர்மானித் திருக்கிறோம்.

நாணயங்களை வெளியிடு வதோடு மட்டுமில்லாமல் டெல் லியில் உள்ள மத்திய கப்பற்படை தளத்தில் ராஜேந்திர சோழனின் படத்தை திறப்பதற்கும் அரக் கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கப்பற்படை விமான தளத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்டவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்’’ என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x