Published : 05 Jun 2015 07:47 AM
Last Updated : 05 Jun 2015 07:47 AM
வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலைகள் இருப்பிடம் பார்வையாளர்கள் மேலிருந்து கீழ்நோக்கி பார்க்கும் வகையில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. இதனால் பார்வையாளர்கள் முதலைகளின் மேல் பகுதியை மட்டுமே பார்க்க முடியும். நீருக்கு அடியில் முதலைகளின் செயல்பாடு களை பார்க்க முடியாது. இக்குறை பாட்டை போக்கும் வகையில் கங்கை நீர் முதலை நீரடி பார்வைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பார்வை கூடத்திலிருந்து கங்கை நீர் முதலைகளை கண்ணாடி வழியாக மிக அருகில் இருந்து பார்க்கலாம். மேலும் இக்கூடத்தில் கங்கை நீர் முதலைகளைப் பற்றிய முக்கிய தகவல்களை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 4 மிளிரும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இக்கூடத்தில் கங்கை நீர் முதலை இனத்தைச் சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் விடப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT