Published : 29 Jun 2015 07:13 AM
Last Updated : 29 Jun 2015 07:13 AM

திருவல்லிக்கேணி பகுதியில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை: மூன்று புதிய கழிவுநீரேற்று நிலையங்கள் அமைகிறது

திருவல்லிக்கேணியில் சாலை களில் அடிக்கடி கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க மூன்று புதிய கழிவுநீரேற்று நிலையங்களை அமைக்கும் பணியில் சென்னை குடிநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவல்லிக்கேணி பகுதியில் 87 தெருக்கள் உள்ளன. இதில் சுமார் 41 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு உருவாகும் கழிவுநீர், பாரதி சாலை வழியாக பெரிய தெருவில் அமைந்துள்ள ராட்சத செங்கல்லாலான வளைவு கழிவுநீர் அமைப்பு வழியாக சேகரிக்கப்பட்டு அருணாசலம் தெரு, வாலாஜா தெரு மற்றும் அண்ணாசாலை வழியாக நேப்பியார் பூங்கா கழிவு நீரிறைக்கும் நிலையத்தை வந்தடைகிறது.

திருவல்லிக்கேணி பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் சுமார் 80 வருடங்களுக்கு முன் கழிவுநீர் குழாய்கள் மற்றும் ராட்சத செங்கல்லாலான வளைவு கழிவுநீர் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இவ்வமைப்பில் சில இடங்களில் உடைப்புகளும், அடைப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இதனை சீரமைக்க இப்பகுதி யில் உள்ள கழிவுநீர் அமைப்பு கள் மூன்று பகுதியாக பிரிக் கப்பட்டு, தனித்தனியாக கழிவு நீரிறைக்கும் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் பார்த்தசாரதி தெருவில் புதிதாக கழிவுநீரிறைக்கும் நிலையம் அமைக்கப்பட்டு செயல்படுத் தப்பட்டு வருகிறது.

அருணாசலம் தெருவிலும், சின்னத்தம்பி தெரு விலும் சாலை ஓர கழிவு நீரிறைக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் ஒரு மாத காலத்துக்குள் முடிக்கப்படும்.

இப்பணிகள் நிறைவடைந்தால் திருவல்லிக்கேணி பகுதியில் நீர்வழித்தடங்களில் கழிவுநீர் கலப்பது முற்றிலுமாக தடுக்கப்படும். மேலும், இங்கு அடிக்கடி சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடுதலும் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x