Published : 30 Jun 2015 07:45 AM
Last Updated : 30 Jun 2015 07:45 AM

விஐடி பல்கலைக்கழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தில் இலவச சேர்க்கை

ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் விஐடி பல்கலைக் கழகத்தில் பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆணை களை வேந்தர் ஜி.விசுவநாதன் நேற்று வழங்கினார்.

தமிழ்நாட்டில் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விஐடி பல்கலைக்கழகத்தில் இலவச மாக படிக்க ‘ஸ்டார்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, அனைத்து மாவட் டங்களில் அரசுப் பள்ளியில் படித்து மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு விஐடி பல்கலைக் கழகத்தில் பி.டெக் பொறியியல் படிப்பை இலவசமாக கற்கலாம்.

இந்த திட்டத்தின்படி திருநெல் வேலி, திருச்சி, கோவை, வேலூர் மற்றும் மதுரை என 5 இடங்களில் கலந்தாய்வு நடந்தது. 8-ம் ஆண்டாக ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடந்தது. விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஆணை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேந்தர் ஜி.விசுவ நாதன் பேசும்போது, ‘‘ஒரு நாட்டுக்கு எந்தளவுக்கு கல்வி முக்கியமோ, அந்தள வுக்கு ஆசிரியர்களின் பணி முக்கியமானது. ஒரு சமுதாயத்தை மாற்றியமைக்கும் திறமை ஆசிரி யர்களுக்கு உண்டு. இரண்டாம் உலகப்போரில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நாடு ஜப்பான். அந்த நாட்டு மக்களின் கடின மான உழைப்பு மற்றும் கட்டுப்பாடு காரணமாக இன்று அமெரிக்காவுடன் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே போல தென்கொரியா 1970-ம் ஆண்டில் தனிநபர் வருவாய் இந்தியாவை விட மிக குறைவாக இருந்தது. அவர்களின் அபரித மான கல்வி வளர்ச்சியால் தனி நபர் வருமானம் 35 ஆயிரம் டாலராக உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் முன்ன ணியில் உள்ள 250-க்கும் மேற் பட்ட நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான திறமையான மாணவர்களை விஐடி-யில் தேர்வு செய்து வேலை வழங்குகின்றனர். மாணவர்களுக்கு ஒழுக்கம், உழைப்பு, கட்டுப்பாடு இருந்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், துணை வேந்தர் ராஜூ, இணை துணை வேந்தர் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x