Published : 15 Jun 2015 08:15 AM
Last Updated : 15 Jun 2015 08:15 AM

என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை எதிரொலி: நெல்லையில் பஸ்கள் மீது கல்வீச்சு - 20 பேர் கைது; நீதிபதி விசாரணை

திருநெல்வேலி அருகே ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக நீதிபதி நேற்று நேரில் விசாரணை நடத்தி னார். ரவுடியின் ஆதரவாளர்கள் பஸ்கள் மீது கல்வீசி ரகளையில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகேயுள்ள கான்சாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கிட்டப்பா (39). இவர் மீது கொலை, கொள்ளை, மணல் கடத்தல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

திருநெல்வேலி அருகே சுத்த மல்லியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கிட்டப்பாவை போலீஸார் நேற்றுமுன்தினம் இரவு பிடிக்க முயன்றனர். அவர், போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிட்டப்பா மற்றும் அவருடன் இருந்த ரவுடிகள் தாக்கியதில் போலீஸ் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் 3 போலீஸார் காயமடைந்து பாளை யங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி விசாரணை

சேரன்மகாதேவி நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி மாய கிருஷ்ணன், கிட்டப்பா சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து பாளை யங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள கிட்டப்பாவின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அவரது உறவினர் களிடம் விசாரணை நடத்தினார். இதேபோல் காயமடைந்து சிகிச்சை பெறும் போலீஸாரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே கிட்டப்பாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பாளை யங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறை முன்பு அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று திரண்டனர். அவர்கள் போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதரவாளர்கள் வன்முறை

பகல் 1.20 மணியளவில் கிட்டப்பாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுமார் 75 மோட்டார் சைக்கிள்களில் அவரது சொந்த ஊரான கான்சாபுரம் நோக்கி புறப்பட்டனர்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ் மீது ஒருவர் சோடா பாட்டிலை வீசினார். இதில் பஸ்ஸின் கண்ணாடி சேதமடைந்தது. பயணிகள் அலறியடித்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து பாளையங்கோட்டை பஸ் நிலையம் சென்ற அக்கும்பல் அங்கேயும் ரகளையில் ஈடுபட்டது. குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே மற்றொரு அரசு பஸ் மீது கற்களை வீசினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. தொடர்ந்து கருங்குளம்- மேலப்பாளையம் இடையே சென்றபோது மேலும் ஒரு அரசு பஸ் மீது கற்களை வீசி சேதப்படுத்தினர். சாலையோரம் நிறுத்தியிருந்த சில வாகனங்கள் மீதும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பாக 20 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x