Published : 21 May 2014 10:37 AM
Last Updated : 21 May 2014 10:37 AM

10 நாட்களில் 4 கைதிகள் மரணம்: புழல் சிறையில் தொடரும் சோகம்

புழல் சிறையில் அடைக்கப்பட்டி ருந்த கைதிகளில் 4 பேர் கடந்த 10 நாட்களில் மரணம் அடைந் துள்ளனர். இது புழல் சிறையில் முறையான மருத்துவ வசதிகள் உள்ளதா என்ற கேள்வியை எழுப் பியுள்ளது.

சென்னை சைதாப்பேட் டையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). குமரன் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட் டரி சீட்டுக்களை விற்று கொண் டிருந்ததாக கைது செய்யப் பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டார். கடந்த 12-ம் தேதி இரவு ராஜேந்திரனுக்கு திடீ ரென வலிப்பு நோய் ஏற்பட் டது. இதைத்தொடர்ந்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.

கோவை மாவட்டம் பல் லடத்தை சேர்ந்தவர் முத்துக் குட்டி(40). ஒரு கொலை வழக் கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த 12-ம் தேதி காலையில் திடீரென நெஞ்சு வலி ஏற் பட்டது. ராயப்பேட்டை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட இவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக கூறி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாரியப்பன்(40) என்பவருக்கு கடந்த 13-ம் தேதி வாந்தி மற் றும் மயக்கம் ஏற்பட்டது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அடுத்த நாள் காலையில் மரணமடைந்தார்.

சென்னை மடிப்பாக்கம் கீழ்க் கட்டளையைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (42). மது பான கடை பாரில் வேலை பார்க் கிறார். நாடாளுமன்ற தேர் தல் வாக்கு எண்ணிக்கை தினத் துக்கு முந்தைய நாளில் 500-க்கும் அதிகமான மது பாட்டில் களுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த அவரை போலீ ஸார் கைது செய்து புழல் சிறை யில் அடைத்தனர். திங்கள் கிழமை பிற்பகல் கோபால கிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக சிறைத்துறை அதிகாரிகள் கோபாலகிருஷ்ணனை ராயப் பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் இரவு 10 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இப்படி 10 நாட்களில் 4 கைதிகள் உயிரிழந்திருப்பதற்கு புழல் சிறையில் முறையான மருத்துவ வசதிகள் இல்லாததுதான் காரணமா என்ற கேள்வி எழுந் துள்ளது. புழல் சிறைக்குள் 24 மணி நேரமும் ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே மருத்துவர் இருக்கிறார் என்றும் மற்ற நேரங்கள் எல்லாம் வார்டு பாய்தான் மருந்து கொடுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்படும் ஒவ்வொரு கைதி உயிருக்கும் சிறை நிர்வாகம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x